IMP

வாஜ்பாய் – அத்வானி இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி’யைக் கொண்டுவந்தனர், மோடி – ஷா இஸ்லாமியர்களை வடிகட்டும் திருத்தங்களைச் சேர்த்தனர்…

27 Dec 2019

இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சியும் குடியுரிமை சட்டதிருத்தமும் குடியுரிமை சட்டத்தின் பகுதிகள் தான். அவை வாஜ்பாய்-அத்வானியால் 2003இலும், மோடி-ஷாவால் 2019இலும் சேர்க்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் பரப்புரையின் போது பேசிய மோடி பின்வருமாறு கூறினார்: “அது(என்.ஆர்.சி) காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்டது....

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு – தமிழ்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

18 Dec 2019

சட்டத்திருத்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் வாக்களித்து நிறைவேறுவதற்கு ஏவல் புரிந்த எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய இந்து பயங்கரவாத தேசிய அரசாங்கத்திற்கு குண்டர் படையாக செயல்பட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. நேற்றைய தினம்...

குடியுரிமை சட்டத்திருத்தம் CAB – மோடி எழுப்பிய பிரிவினை சுவர்

11 Dec 2019

கடந்த புதன் அன்று அமைச்சரவை ஒப்புதல் பெற்ற குடியுரிமை சட்டத்திருத்தம் திசம்பர் 10 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு மாலை சுமாராக 8:50 மணி அளவில் மாநிலங்களவையிலும் வெற்றிப் பெற்றுவிட்டது. மக்களவையில் பா.ச.க.வுக்கு 303 இடங்கள் இருக்க, மாநிலங்களவையில்தான் சட்டம் நிறைவேறாமல்...

குடியுரிமை சட்டத்திருத்தம் CAB மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC- நாம் ஏன் எதிர்க்கவேண்டும் ?

05 Dec 2019

மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டம் 1955 இல் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் நேற்று முன்தினம் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றியது. இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற முயற்சித்துவருகிறது. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வலுவான...

நெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன?

26 Nov 2019

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாதெனவும் சொல்வதுண்டு. காட்டைப் பார்ப்போர் மரத்தைப் பார்ப்பதில்லை. மரத்தைப் பார்ப்போர் காட்டைப் பார்ப்பதில்லை. அதிலும் மரத்தின் கிளை, இலை மட்டுமின்றி வேரையும் ஊருருவிப் பார்ப்பதில்லை. கண்ணில்...

மோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)

26 Oct 2019

      அரசியல் சூழலும் – குறைந்தபட்ச செயல் திட்டமும் மோடி – அமித் ஷா சிறுகும்பல் ஆட்சியின் மைய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்! காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! இந்துத்துவப் பாசிச அபாயத்தை முறியடிப்போம்! தமிழகத்தின் சனநாயகம் காக்க இடதுசாரி,...

சனநாயகத்திற்கு குட்பை சொல்லு! சிறுகும்பலாட்சிக்கு சல்யூட் அடி! நிர்மலா சீதாராமனின் வெளிப்படையானப் பேச்சு! ஏன்? எப்படி?

18 Oct 2019

அக்டோபர் 12 அன்று வட அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம்ராஜன் ஆற்றிய உரையில் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைகுறித்து கவலை தெரிவித்திருந்தார். வெகுசனப் பெரும்பான்மைவாதம் தேர்தலில் வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால், அது இந்தியாவை இருளுக்கும்...

மோடி – ஜி ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு – இராஜதந்திர அரசியல் குறித்து தமிழகத்தின் பார்வைகள்

12 Oct 2019

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பை ஒட்டி ஆளுநர் சந்திப்பு நடந்தபோதே ஓர் யூகம் எழுந்தது. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை ஓட்டி எதிர்ப்புப் போராட்டங்களோ எதிர்ப்புப் பிரச்சாரங்களோ வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டதாகப் செய்திகள் வந்தன. திமுக இந்தித் திணிப்பு எதிர்ப்புப்...

ஆங்கில மொழி சமூக நீதிக்கானதா? பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் சனநாயகத்தின் வரம்பென்ன?

27 Sep 2019

அண்மையில் அமித் ஷா இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பேசிய பேச்சை ஒட்டி எழுந்த விவாதங்களில் இரு மொழிக் கொள்கை, hindi never, English ever, திமுக வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தருவது, தொடர்பு மொழி ஆகியவைப்...

நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா?

18 Sep 2019

நவீன அமெரிக்காவைக் கட்டியெழுப்பியது தெற்கின் பிற்போக்கு பிரபுக்களல்ல, வடக்கின் லிங்கனே! நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா? மூன்று நாட்களுக்கு முன்பு ’இந்தி  நாள்’ அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்த ஒரு மொழி...

1 38 39 40 41 42 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW