அநுர சிறிலங்காவின் மீட்பராக வழியென்ன? – செந்தில்
அநுரகுமார திசநாயக்காவின் வெற்றி தெற்காசிய அளவில் உள்ள பெரும்பாலான, இனச்சிக்கலைக் கருத்தில் கொள்ளாத இடதுசாரி கட்சிகளால் வரவேற்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் சிறிலங்கா மீட்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது என்று பார்க்கப்படுகிறது. இனவாதப் புதைக்குழியில் இருந்து சிங்களப் பெரும்பான்மை மக்கள்...