விநாயகர்_சதுதர்த்தியின்_பேரால்_காவி_பயங்கரவாதிகளின்_கலவரத்தை_முறியடிப்போம்!

13 Sep 2018

தாங்கள் காலூன்ற முடியாத தமிழ்நாட்டில் கலவரங்களை உருவாக்குவதன் மூலம் இந்துக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.- இந்து முன்னணி காவிக் கும்பல் முன்னெடுத்து வருகிறது.

வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி தமிழ்நாட்டில் வீட்டிற்குள் கடைப்பிடிக்கப்பட்டு மூன்றாம் நாள் ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கப்பட்டு முடிந்த விநாயகர் சதுர்த்தி. சமீப சில வருடங்களாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி இயக்கங்களால் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அரசியலாக்கப்பட்டு அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கிற்கு, பொது அமைதிக்கு சவாலாகி வருகிறது.

வீதிக்கு சில விநாயகர் சிலைகள் எனத் தமிழ்நாடெங்கும் திட்டமிட்டுப் பரவலாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலங்கள், கரைப்பதற்கு ஊர்வலங்கள் என ஒரு வாரம் விநாயகர் சதுர்த்தி அரசியல் கலவரங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மாற்று மதத்தினர் குடியிருக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் வைக்குமிடங்களிலெல்லாம் இந்து முன்னணி கொடிகள் கட்டப்பட்டு மதவெறி நஞ்சூட்டப்படுகிறது. சிலை அரசியல் நிகழ்ச்சிகளில் பா.ச.க.தலைவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் இராமராஜ்ய இரத யாத்திரையை தடுத்துப் போராட்டம் நடந்த செங்கோட்டையில், நேற்று 13-09-2018 இரவு விநாயகர் ஊர்வலம் என மிகச்சில காவல்துறையினர் உடன் வர இஸ்மியர் பகுதி வழியாக நுழைந்துள்ளனர். இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்ப, இஸ்லாமியர் எதிர்ப்பு தெரிவிக்க என இந்து முன்னணியினர் கலவரத்தை உருவாக்கி உள்ளனர். வண்டி வாகனங்கள், கடைகள் என அடித்து நொறுக்கியுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் செங்கோட்டை, முத்துப்பேட்டை எஎனத் தொடர்கிறது.

காவிபயங்கரவாதிகளின் கலவரத் திட்டங்களை முறியடிக்க, அஅரசு, காவல்துறை உரிய முறைகளில் கட்டுக்குள் கொண்டுவர சனநாயகத்திற்காகப் போராடும் சக்திகள், சிறுபான்மை மதங்களின் மக்கள் பாதுகாப்புக்காகப் போராடும் சக்திகள் மீண்டும், மீண்டும் ஓரணியில் திரள வேண்டும்!
விநாயகர் சதுர்த்தியின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி வகையறாக்களால் நடத்தப்படும் கலவரங்களை எதிர்கொள்வோம்!

தோழமையுடன்
மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்
காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW