புரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே!
#புரட்சிகர_இயக்கங்கள்_இணைந்து_இயங்கினால்_அச்சமா_தர்மபுரிக்_காவல்துறையே! காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட மா – லெ தோழர் பாலன் நினைவேந்தல் செப் 12 அன்று தர்மபுரி – நாய்க்கன் கொட்டாயில் நடத்துவது வழக்கம். பிரிந்து தனித்தனியாக இயங்கும் தோழர்கள் தங்கள் அமைப்புகள் சார்பில் தனித்தனியாக தோழர்கள் அப்பு – பாலன் நினைவிடத்திற்கு செவ்வணக்கம் செலுத்துவது வழக்கம்!
நினைவிடம் நிறுவப்பட்ட பட்டா இடம் காவல்துறை உளவுத்துறை தூண்டுதலின் பேரில் பிரச்சனை உருவாக்கப்படுவதால் இம்முறை – சிபிஐ(எம் – எல்) கனுசன்யால் அமைப்பில் இயங்கும் தோழர் சித்தானந்தம் தலைமையில், இனவிடுதலைக்கான இளைஞர் – மாணவர் இயக்கத்தை வழிநடத்தும் தோழர் தமிழ்வாணன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ – மா) பொதுச்செயலாளர் தோழர் பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைமைக் குழுத் தோழர் ரமணி மற்றும் தோழர் விவேக் உள்ளிட்டோரைக் கொண்ட நிலமீட்புக் கூட்டமைப்பு , அப்பு – பாலன் நினைவேந்தல் குழு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தோழர்கள் இணைந்து தர்மபுரியை மையப்படுத்தி பரப்புரை செய்து வந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு இன்று மாலை துண்டறிக்கைப் பரப்புரை, தர்மபுரியில் சுவரொட்டி ஒட்டுதல் எனச் செயல்பாட்டில் ஈடுபட்ட போது தர்மபுரி காவல்துறை தோழர்கள் சித்தானந்தம், ரமணி, வேடியப்பன், இராமச்சந்திரன் ஆகிய நால்வரைக் கைது செய்து அழைத்துச் சென்றது. தொலைபேசியில் நான் பேசும் போது விசாரித்து அனுப்பி விடுவார்கள் எனக் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் தோழர்கள் நால்வரும் சிறைப்படுத்தப்படுவதாக செய்தி வந்துள்ளது. இணைந்து, ஒன்றுபட்டு நடத்தப்படும் செப் 12 ஈகியர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்யும் நோக்கத்தில் காவல்துறை அடாவடிக் கைதில் ஈடுபட்டுள்ளது.
மோடி அரசின் எடுபிடி எடப்பாடி தமிழகக் காவல்துறையின் சனநாயக விரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தூத்துக்குடி, திருவண்ணாமலை, தர்மபுரி எனத் தொடரும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள வேண்டிய கடமை நம் முன்னே சவாலாக எழுந்து ருகிறது. எதிர்கொள்வோம் தோழர்களே!
நக்சல்பாரிக் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் செப் 12 அப்பு – தோழர் பாலன் நினைவிடத்தில், செப் 13 தோழர் சுப.சுப்பு நினைவிடத்தில் அணிதிரள்வோம் தோழர்களே! ஈகியருக்கு செவ்வணக்கம்!
தோழமையுடன், மீ.த.பாண்டியன்,
தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி பேச: 9443184051