பொன்பரப்பி தலித் மக்கள் மீதான தாக்குதலும் அரசியல் பின்புலமும் – கள ஆய்வறிக்கை
கடந்த 18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வசித்துவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்மீது 70க்கும் மேற்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். சிதம்பரம் தொகுதி...