லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 4
நிகோலாஸ் மாதுரோ குடியரசு தலைவர் ஆன பின்பு: 2013 இறுதியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாதுரோ 8 சதவிகிதம் அதிகம் பெற்று வெற்றி அடைந்ததன் பின், எதிர்க்கட்சிகள் பேச்சற்றுப் போயின. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களான லியோபோல்தோ லோபெஸ், மரீயா கொரீனா மச்சாதோ...