இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் L&T சுப்ரமணியன் ஆகியோர் தினமும் 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று முன்மொழிகின்றனர் – இது கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கான அழைப்பா? – சிறீராம்

12 Jan 2025

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஒரு மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். (வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணிநேரம் வேலை). உலக அளவிலான நிறுவனங்களின் தலைவர்கள் மூர்த்தியின் 70 மணிநேர யோசனை பற்றி சிறிது நேரம் விவாதித்துள்ளனர், இப்போது L&T தலைவர் சுப்ரமணியன் வாரத்திற்கு 90 மணிநேர வேலை (ஒரு நாளைக்கு 15 மணிநேரம் 6 நாட்களுக்கு) வாதிடுகிறார், மேலும் அவர் ஊழியர்களிடம் ” ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் மனைவி அல்லது கணவரை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்” என்று கேட்டார்…..எப்படியோ குடும்பத்தில் உள்ள குழந்தைகளைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.. இந்தக் கூற்று குடும்ப வாழ்க்கையை கேலி செய்வது மட்டுமின்றி மனித வாழ்வின் நோக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. சில கோடீஸ்வரர்களை உருவாக்கி வரி கட்ட வேண்டும் என்பதற்காக பிறந்தவர்களா தொழிலாளர்கள்? இந்த நோக்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் மாடாய் உழைக்க வேண்டியவர்களா? மோடியின் மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களைத் திருத்திய நேரத்தில், வாரத்திற்கு 72 மணிநேரம், நாளொன்றுக்கு 12 மணிநேரம் என்ற விதிமுறைகளை ஏற்கனவே வரைந்திருந்த நேரத்தில், இந்த விவாதம் நடப்பதில் ஆச்சரியமில்லை. தமிழகத்தில் திமுக அரசு 12 மணி நேர வேலையை சட்டப்பூர்வமாக்க முயற்சித்தது, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 14 மணிநேரம் என மாற்றி தங்கள் கார்ப்பரேட் வட்டத்தை திருப்திப்படுத்த முயன்றது, ஆனால் அவர்கள் எதிர்கொண்ட எதிர்ப்பின் காரணமாக அதை செயல்படுத்த முடியவில்லை. *எங்கிருந்து தொடங்குவது?* நமது தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணிநேரம் அதாவது ஒரு நாளைக்கு 8 மணிநேரம் x வாரத்தில் 6 நாட்கள் என்று கூறுகிறது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு மற்றும் 8 மணிநேர ஓய்வு என்ற இந்த யோசனை உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது 1917 இல் ரஷ்யாவில் நடைபெற்ற சோசலிச புரட்சியின் விளைவாகும். தினசரி 8 மணி நேர வேலை என்பது பெரிய தொழிற்சாலைகள், பொதுத்துறை வங்கிகள், அரசு துறைகள் மற்றும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்கூட, வீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் வேலைகள் உட்பட ஒரு நாளின் உண்மையான வேலை நேரம் வாரத்திற்கு 10 மணிநேரம் x 5 நாட்கள் = 50 மணிநேரம் ஆகும். எல்&டி வேலை நேரம் ஏற்கனவே ஒரு நாளைக்கு 12 மணிநேரம்… மக்கள் கட்டுமானப் பகுதிக்கு காலை 8 மணிக்குள் சென்றடைகிறார்கள், இரவு 8 மணிக்கு முன்பு வெளியேற மாட்டார்கள். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வேலைப் பார்க்கும் இடத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் பயண நேரம் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் என்று வைத்துக் கொள்ளலாம், எனவே L&T ஊழியர் தன் வீட்டில் 10 மணிநேரத்திற்கும் குறைவாகவே செலவழிக்கிறார். கட்டுமானத் தொழிலாளர்கள், உற்பத்தித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடைத் தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள் போன்ற உடல் உழைப்புத் தொழிலாளர்கள் பணி நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளது.. *ஊதியம், வருமானம் மற்றும் செல்வம் ஆகியவற்றில் ஆபத்தான சமத்துவமின்மை* * 2024 ஆம் ஆண்டில் எல்&டி சுப்ரமணியன் 51 கோடி சம்பாதித்ததாக எக்னாமிக்ஸ் & டைம்ஸ் தெரிவிக்கிறது, இது L&T ஊழியரின் சராசரி சம்பளத்தை விட 500 மடங்கு அதிகம். இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சராசரி ஊழியர்களின் சம்பளத்தை விட 677 மடங்கும், விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி சராசரி சம்பளத்தை விட 1700 மடங்கும் சம்பாதிப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆய்வு கூறுகிறது. வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், கொரோனாவுக்குப் பிறகு உயர் நிர்வாகத்தின் சம்பளம் பல மடங்கு அதிகரித்துள்ளது, அதேநேரத்தில் ஊழியர்களின் சம்பளம் தேக்க நிலையில் உள்ளது. இன்ஃபோசிஸ் ஊழியரின் தொடக்கச் சம்பளம் 2004 இல் 24,000 ரூபாய் ஆக இருந்தது, மேலும் பணவீக்கத்தைக் கருத்தில் எடுத்துப் பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளில் தொடக்க நிலை சம்பளம் குறைந்துள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் 2022 மதிப்பீட்டின்படி, இந்தியாவில் உள்ள முதல் 10% தனிநபர்கள், ஒரு வருடத்தில் ஈட்டப்படும் வருமானத்தில் 60% யையும்ன் எடுத்துச் செல்வதாகவும் மொத்த சொத்துக்களில் 80% ஐ கையில் வைத்திருப்பதாகவும் சொல்கிறது (முதல் 1% பேர் 23% வருமானம் மற்றும் 40% சொத்துக்களை எடுத்துக் கொள்கிறார்கள்… நாராயணமூர்த்தி நிச்சயமாக இந்த உயர் குழாத்தின் பகுதி).. எளிமையான சொற்களில் சொல்வதானால் சொகுசு கார் விற்பனை வளர்ச்சி சிறிய கார் விற்பனையை விட அதிகமாக உள்ளது. தனிநபர்கள் 4 அல்லது 5 சொகுசு கார்களை வைத்திருப்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது.. ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் விஷயமும் அப்படித்தான், ஒவ்வொரு பெருநகரத்திலும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் காலியாக வைக்கப்படுகின்றன, அதேசமயத்தில் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் வங்கிக்கு கடன் தவணைகளை செலுத்தி வருகின்றனர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வகுப்பினர் பெருநகரங்களில் அதிக வாடகையை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். கோத்ரேஜ் ( Godrej) தலைமை நிர்வாக அதிகாரி சுதிர், இந்த வளர்ந்து வரும் சமத்துவமின்மையை ஒப்புக்கொள்கிறார். “இந்தியாவின் உச்சநிலை வளர்ந்து வருகிறது, மற்றவை அவ்வளவாக இல்லை. மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பல வெகுஜன நுகர்வுத் துறைகள் குறைந்த அளவு வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. மறுபுறம், SUV க்கள், நவீன சில்லறை விற்பனை மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற அதிக ‘பிரீமியம்’ துறைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன”தினசரி கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் ஏற்கனவே அதிகரித்துள்ள பணவீக்கத்திற்குப் பிறகு, தினசரி கூலித் தொழிலாளி பத்து ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததைவிட 15% குறைவாகவே சம்பாதிப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO கூறுகிறது. மெட்ரோ நகரங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. நாளொன்றுக்கு 1000 என்பது இன்னும் மெய்ப்படவில்லை. அதனால்தான் பொறியியல் பட்டதாரிகளும் ஊபர்/சுவிக்கி/போர்ட்டர் (Uber/Swiggy/Porter) போன்றவற்றில் கிக் தொழிலாளர்களாக மாறுகிறார்கள். இந்த தேசத்தைப் பாதுகாப்பதற்காக கோவிட் நோய்க்கு தங்களை வெளிப்படுத்திக் கொண்ட தூய்மைப்பணியாளர்கள் சுரண்டப்பட்டு, இன்றுவரை பெருநகரங்களில் ரூ.500க்கும் குறைவான ஊதியம் பெற்று வருகிறார்கள்.. நீண்ட வேலை நேரத்தை மறந்து விடுங்கள், இந்தியாவில் தொழிலாளர்களுக்கு நியாயமான வாழ்க்கை ஊதியம் உள்ளதா? *நீண்ட நேரம் வேலை பார்த்தல் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துமா* ?முற்றிலும் இல்லை! அதை நிரூபிக்க பல்வேறு ஆய்வுகள் உள்ளன. இந்தியாவில் உள்ள முதலாளிகள் கடந்த 75 ஆண்டுகளில் எந்தப் புத்தாக்கத்தையும் நிகழ்த்தவில்லை.. இஸ்ரோ போன்று அரசுத் துறையில்தான் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாராயணமூர்த்தி போன்ற முதலாளிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்யவில்லை, அவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு சேவை செய்து டாலர்களில் பணம் சம்பாதிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளனர், இப்போது அவர்கள் சாதாரண மக்களுக்கு விரிவுரை செய்கிறார்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்! கல்வி, சுகாதாரம் ஆகியவை தனியார் வணிக உரிமையாளர்களின் கைகளிலும், அறிவையோ படைப்பாற்றலையோ வளர்க்காத கல்விப் பாடத்திட்டம் மற்றும் தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை முழுமையான அலட்சியப் படுத்தும் சாதி அமைப்பு ஆகியவை நிரம்பிய ஒரு நாட்டில். எந்த அடிப்படையில் தொழிலாளர்கள் ஈகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? காலனித்துவ கால அடிமை முறை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது…உலகளவில் தொழிலாளர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.. செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்ப முன்னேற்றம் வேலைச் சுமையைக் குறைக்கும் மற்றும் 8 மணி நேரத்திற்கும் குறைவாக வேலை செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. ஐரோப்பாவில் 6 மணிநேர வேலைக்கான கோரிக்கைகள் உள்ளன. ஆனால் உலகளாவிய கார்ப்பரேட்கள் அதை மனித முன்னேற்றத்திற்காக பயன்படுத்தாமல், மேலும் மேலும் லாபம் ஈட்டுவதற்காகவே பயன்படுத்துகின்றன.. பல விமர்சனங்களுக்குப் பிறகு, நாராயணமூர்த்தியிடம் 70 மணிநேர வேலை பற்றிய தனது யோசனையை மறுபரிசீலனை செய்கிறீர்களா என்று மீண்டும் ஒருமுறை கேட்கப்பட்டது… வேலை –வாழ்க்கை சமநிலையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தனது கருத்து கல்லறை வரை எடுத்துச் செல்லப் போவதாகவும் கூறினார். அப்படியே ஆகட்டும்! அவர் கல்லறைக்குச் சென்று நிம்மதியாக உறங்கட்டும்.*வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதை அழகாக்க முழு மூச்சுடன் போராடுவோம்.*

10.01.25

9500056554

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW