நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது ! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

09 Oct 2018

ஆபாச ஆளுனரே! அடிமை எடப்பாடியே! பதவி விலகு

போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, ஆள் தூக்கி சட்டங்களில் பல்வேறு இயக்க தோழர்கள் கைது. முக நூல் பதிவிற்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பத்திரிக்கையில் எழுதுவதற்கும், கருத்துரிமை மறுப்பென தொடர்ந்து ஒடுக்குமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்  அடிமை அரசும் ஆபாச ஆளுனரும்.

நிர்மலா தேவி வழக்கு விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை அறிக்கையை வெளியிடாமல்,  பின்புலத்திலுள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல்,  ஆளுனர் குறித்த ஐயம் தீர்க்கபடாமல் இருக்கின்ற நிலையில் இது குறித்து தொடர்ந்து எழுதி வரும் நக்கீரனை மிரட்ட நினைப்பது தொடரும் அடக்குமுறையின் உச்சக்கட்டமாக மாறிக்கொண்டு இருக்கிறது.

கடந்த காலங்களில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டு ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்,நக்கீரன் இந்து உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கை ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளாக தேடப்பட்டார்கள் அப்பொழுதெல்லாம் ஆட்சியின் இறுதிகாலங்களில் நடந்த அராஜகம் இப்போது கண் முன் நிழலாடுகிறது. இப்பொழுது பாசிச பா ஜ க கும்பலுடன் சேர்ந்து டெல்லிக்கு கங்காணி வேலை பார்க்கும் இ பி எஸ் – ஓ பி எஸ் கும்பல் அராஜகத்தின் உட்சக்கட்டத்தை தொட்டுகொண்டிருக்கிறது.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய பாசிச கும்பலை சேர்ந்த எஸ் வீ சேகரையோ ஆண்மையற்ற முதல்வர் என்று சொன்ன குருமூர்த்தியையோ காவல்துறையையும் உயர்நீதிமன்றத்தையும் மயிரென இழிவு படுத்திய எச் ராஜாவையோ  கைது செய்ய வக்கற்ற வெட்கமின்றி ஆட்சி நடத்தும் இந்த அடிமை கும்பல் எதிர்ப்பின் சிறு முனுமுனுப்புகளுக்கு கூட டெல்லியின் கட்டளையை ஏற்று பாய்கின்ற காவல் நாய்களைப்போல பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

எனவே தமிழக மக்களின் சிறிதும் ஆதரவற்ற, ஒழியட்டும் இந்த ஆட்சி என மக்களின் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கும் நிலையில் அதை கருத்தாக பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்ற ஊடகங்களை பத்திரிக்கைகளை ஒடுக்குவது கருத்துரிமையை பறிக்கின்ற பாசிசத்தின் ஒத்திகையாகும் எனவே இச்செயலை அனைத்து சனநாயக சக்திகளும் வன்மையாக கண்டித்து இக்கும்பலை பதவியிலிருந்து தூக்கி எறிவதற்கு ஒருங்கிணைந்து பாடாற்ற வேண்டுமென தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

 

பாலன்

பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW