குருந்தூர் மலை முதல் கச்சத்தீவு வரை – வடக்குநோக்கி நீளும் பெளத்தமயமாக்கல் ஏன்? – தோழர் செந்தில்
கடந்த மார்ச் திங்கள் முதல் கிழமையில் புனித அந்தோணியார் திருவிழாவிற்காக கச்சதீவுக்கு போயிருந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே இரண்டு பெளத்த கோயில்கள் முளைத்திருந்தன. ஈழத் தமிழர்களுக்கு இது அத்தனை அதிர்ச்சி அளித்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கடந்த 13...