நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…சென்னை மாநகர பூர்வக்குடி உழைக்கும் மக்களின் குடியிருப்பு –  நில உரிமை தொடர்பான மக்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றுமா திமுக அரசு?

05 Feb 2022
05.02.22
ஊடக அறிக்கை
நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு
இன்று (05.02.2022) கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கம் வளாகத்தில் நடந்தது. குடியிருப்பு – நில உரிமை தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ”பிப்ரவரி 12 – கோரிக்கை நாளாக அறிவித்து பல்வேறு பகுதிகளில் பதாகை ஏந்தி  பரப்புரை மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பங்கேற்ற அமைப்புகள்:
-சிறிராம்,  சோசலிச தொழிலாளர் மையம்
-செபாஸ்டின் , குடிசை மாற்று வாரியக் குடியிருப்போர் நலக்கமிட்டி
-மகிழன் , தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
-மோகன், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி
-நாகூர்மீரான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
-இரா உமாபதி, திராவிடர் விடுதலைக்கழகம்
-கீ.சு. குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்
-லீலாவதி, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு
-அமிர்தா , மக்கள் அதிகாரம்
-இசையரசு, சமூக செயல்பாட்டாளர்
-இரா. அன்புவேந்தன், இந்திய குடியரசுக்கட்சி- தமிழ்நாடு
-அ.கு.வீரத்தமிழ்த்தேசியத் தமிழர் ,  ரெட் ஸ்டார்
-எ.காசிநாதன், ராணி அண்ணாநகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம்
-வேதநாயகம், ராணி அண்ணாநகர் நலவாழ்வு சங்கம்
-லட்சுமணன், ஒட்டகப்பாளையம் குயிருப்போர் சங்கம்
-என். தமிழ்வாணன், சத்தியமூர்த்தி நகர் மக்கள் கமிட்டி
-விமல், கே.பி பார்க் மக்கள் கமிட்டி
-ஆனந்த், சத்யமூர்த்தி நகர்
 மக்கள் கமிட்டி
-மணி அன்னை சத்யா நகர் சங்கம்
உடனடி கோரிக்கைகள்:
1.     சென்னை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியிருப்புகள் இடிக்கப்பட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர். முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் அவ்வை நகர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், குரோம்பேட்டை சிட்லபாக்கம் போன்ற இடங்களில்  ’புறம்போக்கு நிலத்தில்’ உள்ள குடியிருப்புகளை இடிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இப்பகுதிகளில், நீர்நிலை அல்லாத புறம்போக்கு நிலங்களே பெரும்பாலும் உள்ளன. இருந்தும் பட்டா  வழங்குவதற்கான கொள்கை நிலைப்பாடு எடுக்காமல் தமிழக அரசு வீடுகள் இடிக்கும் நடவடிக்கையைத் தொடர்கிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
2.     ’ஆட்சேபனையற்ற’ புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவும் ‘ஆட்சேபனைக்குரிய’ நிலத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்று நிலம் வழங்க 2019ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.(G.O 318) இந்த அரசாணை கடந்த 2 ஆண்டுகளாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது G.O 567 (dated 17.09.21). ஆனால்,. இந்த  அரசாணையை தமிழக அரசு சென்னை நகரத்திற்குள் எங்கும் அமலப்படுத்தவில்லை.  எனவே இந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். (இணைப்பு-1)
3.     சென்னை மாநகரத்தில் பழுதடைந்த சுமார் 20,000 குடிசைமாற்று வாரியக் கட்டிடங்களில் “இடிந்து விழுந்தால் நாங்கள் பொறுப்பல்ல” என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 5  மாடிகள் மட்டுமே கட்டவேண்டும் என்று மக்கள் கோரிவரும் சூழலில் மக்களை அச்சுறுத்தி நெருக்கடிக் கொடுக்கும் அணுகுமுறையை  வாரியம் கைவிடவேண்டும். தற்காலிக மாற்றுக்குடியிருப்புகளை வழங்கி, பின்பு மக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக வீடுகள் கட்டப்படவேண்டும்
4.     அன்னை சத்தியவானி முத்து நகர் –  2019 முதல் வீடிழந்து சென்னை நகரத்திற்குள் மாற்றுவீடுகள் கேட்டுப் போராடிவரும் 190 குடும்பங்களுக்கு உடனடியாகப் புளியந்தோப்பு கே.பி பார்க்கில் வீடுகளை வழங்க வேண்டும்.
5.     கொளத்தூர் அவ்வை நகர் – வீடுகள் இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அருகிலேயே பட்டாவுடன் மாற்று இடம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்,  G.O. no. 567யை அமல்படுத்த வேண்டும்.
6.     பக்கிங்காம் கால்வாயோரம் வசிக்கும் மக்களை சென்னை நகரத்தை விட்டு வெளியேற்றக்கூடாது. குறிப்பாக பெரும்பாக்கத்தில் குடியமர்த்தக் கூடாது. அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே வீடுகள் கட்டித்தரவேண்டும்.
7.     திருவொற்றியூரில் இடிந்துவிழுந்த குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசித்த குடும்பங்கள் தம் உடமைகளை இழந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்த ஒரு  லட்சம்   ரூபாய் போதுமானதல்ல, பாதிப்புக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டும்.
8.     சேத்துப்பட்டு MS நகர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ராணி அண்ணாநகர் –  மக்கள் தொகை அடர்த்தியை அதிகரிக்கும் வண்ணம் 8,10,14 மாடிகள் கட்டக் கூடாது.
9.     வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர், பெரம்பூர் ரமணாநகர், அசோக் பில்லர் –
கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
10.  காசிமேடு – 16 ஆண்டுகளாகப் போராடிவரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட  காசிமேடு AUF மீனவர்களுக்கு அருகில் உள்ள கார்கில் நகரில் உடனே வீடுகள் வழங்க வேண்டும்.
11.  வியாசர்பாடி அன்னை சத்யா நகர் –  பல ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் இருக்கும் சத்தியமூர்த்தி நகர்போன்ற மேம்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.
12.  கே.பி பார்க் – ABCD பிளாக் அனைத்திலும் இரண்டு லிப்ட் உள்ள நிலையில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது, பழுதடைந்துபோன லிப்ட்களை உடனடியாக சரிசெய்து இயக்க வேண்டும்.
13.  பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் –
·         தமிழக அரசின் தவறானக் கொள்கையால் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் சீர்குலைக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
·         வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்துக்கு, பாதுகாப்பு என அடிப்படை தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் தனிச்சிறப்பான திட்டத்தை அறிவித்து உடனே செயல்படுத்த வேண்டும்.
·         பெரும்பாக்கத்தில் மேலும்  மக்களைக் குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும்.
14.  பட்டினப்பாக்கம் – கடலோரம் உள்ள நிலங்களை மீனவர்களுக்கான குடியிருப்புகளுக்கு ஒதுக்கவேண்டும்! பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ள ‘மெரினா தொழிற்பூங்கா’ திட்டத்தை கைவிடவேண்டும்!
பின்வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு நகர்ப்புற குடியிருப்பு – நிலஉரிமை தொடர்பாக தமிழக அரசு கொள்கை வகுத்திட வேண்டும் :
(கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு ‘குடியிருப்பு கொள்கை’  க்கான அறிக்கை வெளியிட்டது, இந்த கொள்கையை தற்போதைய திமுக அரசு மாற்றியமைக்க குழு நியமித்துள்ளது)
1.    தமிழக மக்களுக்கானக் குடியிருப்பு கொள்கையை  உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இக்கொள்கையை தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் முற்போக்கு இயக்கங்களும் மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படையான விவாதத்தின் அடிப்படையில் இறுதிப்படுத்த வேண்டும்.
2.    சென்னை நகரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் வழித்தடத்தின் இன்றைய நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். நீர்நிலைகளுக்கான சுவடுகளே இல்லாத ‘கொளத்தூர் அவ்வை நகர்’ போன்ற பகுதிகளை ‘நீர்நிலை’ என்று சொல்லி வீடுகளை இடிக்காதே!
3.    தமிழக அரசின் ‘வரைவு  மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக் கொள்கையில்’, வீடுகள் அப்புறப்படுத்தப்படும்பொழுது மறுகுடியமர்வு அவ்விடத்தில் இருந்து 5 கீ.மி சுற்றளவிற்குள் செய்யப்படும் என்று திருத்தம் செய்ய வேண்டும்.
4.    சென்னை நகரத்தில் உள்ள காலிப் புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களை உழைக்கும் மக்களின் குடியிருப்பு தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.
5.    எந்த ஒரு TNHUDB குடியிருப்புகளும் இடித்து புதிதாக கட்டப்படும் காலம் வரை முறையான ‘தற்காலிக மாற்றுக்குடியிருப்பு’ வழங்கவேண்டும். அனைத்து பிளாக்குகளையும் ஒரேநேரத்தில் இடிக்காமல் பகுதிபகுதியாக இடித்து கட்ட வேண்டும்.
6.    கே.பி பார்க் போன்று பன்னடுக்கு மாடிகளை (10,12,14 மாடிகள்) கட்டக் கூடாது. மக்கள்தொகை அடர்த்தியை (Population Density) அதிகரிக்கக் கூடாது. Stilt + 4 தளம் என்பதை அமல்படுத்த வேண்டும்.
7.    ஏழை,எளிய மக்கள் வசிக்கும் வீடுகள் தரமற்று கட்டப்படுவதும் சில ஆண்டுகள் கடந்த பின்பு வீடுகள் தானாக இடிந்து விழுவதையும் காண்கிறோம். எனவே முறையான ஆய்வுசெய்து தரமான கட்டிடம் கட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேற்பார்வைக் குழு அமைக்க வேண்டும்.
8.    ’நம் குடியிருப்பு, நம் பொறுப்பு’ என்று சொல்லி பராமரிப்புப் பணிகளை மக்கள்மீது திணிக்காமல் TNHUDB யே செய்ய வேண்டும்.
9.  TNHUDB குடியிருப்புகளில் வாழும் மக்கள் ‘பயனாளர்கள்’, ‘தற்காலிக குடியிருப்போர்’ என்ற நிலையை மாற்றி குடியிருப்புமீதும், நிலத்தின்மீதும் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.
9500056554, 8015472337, 8939136163,  9384448044
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW