செப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும்! தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும்! ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் எதிர்வரும் செப்டம்பர் 16 என்று நடக்கவிருக்கும் எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் என ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துகிறேன். முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து ஆண்டுகள் பத்து உருண்டோடிவிட்டன. முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது...