சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் ! அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் !
கடந்த 5.11.2018 அன்று அரூர், சிட்லிங் கிராமத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சௌமியா உள்ளூர் காமகொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 10.11.2018 அன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் குற்றவாளிகள் யார் எனத் தெரிந்தும் காவல்துறை கைதுசெய்யாமல் தப்பிக்கவைத்தது. இதனை மூடி மறைத்ததுடன், சௌமியாவை மருத்துவ பரிசோதனைக்கு...