5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை!
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் பா.ச.க. வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள்...