ஊடக அறிக்கை – ஜேப்பியார் தொழிற்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

06 Sep 2021

1 கோடியே  7 லட்சம்  ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற் நுட்பக் கல்லூரியின் மீது நடவடிக்கைக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 04.09.21 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். ஜேப்பியார் தொழிற்நுட்பக் கல்லூரி தொழிலாளர் சங்கத்தின்  தலைவர் தோழர் கருணாகரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சோசலிச தொழிலாளர் மையத்தின் SWC நிர்வாகி தோழர் அரவிந்தன் தொடக்க உரையாற்றினார். ஜேப்பியார் குழுமத்தின் தொடர் தொழிலாளர் விரோதப் போக்குகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் சோசலிச தொழிலாளர் மைய்யத்தின் பொதுச்செயலாளர்  தோழர் சதீஸ், பு.ஜா.தொ.மு அமைப்பின் பொறுப்பாளர் தோழர் சிவா,  சோசலிச தொழிலாளர் மைய்யத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சிறிராம் உரையாற்றினர்.

ஜேப்பியார் குழுமத்தைச் சேர்ந்த  ஜேப்பியார் தொழிற் நுட்பக் கல்லூரி சுங்குவார்சத்திரத்தில் பல ஆண்டுகளாக  இயங்கிவருகிறது. கொரோனா  ஊரடங்கு தொடங்கிய உடன் மார்ச் 2020’ மாதத்திலிருந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை  நிர்வாகம் நிறுத்திவிட்டது. குறிப்பாக கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்கல்லூரி விடுதியில் பணியாற்றும் Masters, supplier’s, Canteen workers & plumbers என 34 ஊழியர்களுக்கு  17 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

  1. தொழிலாளர்கள் கூட்டாக சென்று 6 முறை கல்லூரி நிர்வாகத்தை அணுகினர். சம்பளம் பற்றியோ அல்லது பணிக்கு அழைப்பதைப் பற்றியோ உத்தரவாதம் அளிக்கவில்லை. மேலும்,  அவர்களின் பணிக்கு  மாற்றாக  புதிய ஆட்களை, பிற மாநில தொழிலாளர்களை  கல்லூரி நிர்வாகம் எடுத்துச் செயல்படுத்த தொடங்கிவிட்டது.
  2. அனைவரும் கல்லுரி நிர்வாகத்தால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணிநியமனம் செய்யப்பட்டு,  கல்லூரியிலிருந்து நேரடியாக  மாத சம்பளம் பெற்ற தொழிலாளர்கள் ஆவர். மேலும் பெரும்பாலானோர் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் இவர்களின் குழுமத்தில் பணியாற்றுபவர்கள்.
  3. கொரோனா கால ஊரடங்கை காரணம் காட்டி கடந்த17 மாதங்களுக்கு மேலாக இவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் புதிய மாணவர்கள் சேர்ப்பு,  இணையவழி வகுப்புகள் என்று, மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்து  நிர்வாகம்  இயங்கி வருகிறது.
  4. பணிக்கு அழைக்காமல் விட்டதும் மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி பலன்களை வழங்கி, பணியிலிருந்து முறையாக விடுவிப்பதற்கும் நிர்வாகம்  முன்வரவில்லை. தொழிலாளர்களிடம்  கடைசி வாய்ப்பாக உள்ள தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டனர். கடந்த 6 மாதங்களாக அதிகாரியின் முன் 6  முறை  சமரசப் பேச்சுவார்த்தைக்கு  முயற்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அதிகாரியின் முன் வந்து ஆஜர் ஆனார்கள்.  ஆனால் நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வராமல் இருப்பது, அல்லது அதிகாரமற்ற புதியதாக பணிக்கு சேர்ந்த ஊழியரை அனுப்பிவைப்பது என நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது.
  5. இதற்கிடையில் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டதால் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் வங்கிக் கணக்கை கல்லூரி நிர்வாகம், வங்கி மேலாளரின் உதவியுடன் முடக்கியது. அவர்களின் சொந்தப் பணத்தை எடுக்க முடியாதவாறு செய்தனர். சமீபத்தில் ஒரு தொழிலாளியின் தந்தை மரணமடைந்த போது கூட பணம்  எடுக்க முடியாது தவித்த கொடுமையும் நடந்தது.  மேலும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தைக் கல்லூரி நிர்வாகம் கொடுக்காமல் முடிக்கியுள்ளது. இதனால் பிற தொழிலுக்கும் செல்லமுடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
  6. கல்வியை சேவையாக செய்வதாகவும், எந்த லாப நோக்கம் இல்லாமல் செய்வதாக அரசையும், சமூகத்தையும்  ஏமாற்றுவது மட்டும் அல்லது மற்றொரு பக்கம் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடுவதும், கல்வி என்ற பெயரில் கட்டணக் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர்.  கல்லூரி நிர்வாகத்தின் லாப வெறி இவர்களின் மொத்த குடும்பமும் இப்போது வருமானமின்றி, வாடகை கொடுக்க முடியாமலும், புதிய வேலைக்கும் போக முடியாமலும் தடுமாறி வருகின்றனர்.

 

தமிழக அரசே!

  • 17 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள 1 கோடியே  7 லட்சம்  ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை  முழுவதுமாக பெற்றுத் தர நடவடிக்கை எடு!.
  • கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி முறையற்று, விதி மீறலில் ஈடுபடும் ஜேப்பியார் தொழிற் நுட்பக் கல்லூரியின் நிர்வாகத்தை விசாரிப்பதற்கும் துறைசார்ந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அதன் மூலம்  மாணவர்களின் கட்டணம், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் தொழிலாளர்களின் ஊதியம்,  வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்வது மற்றும் கல்லூரி தரம் ஆகியவற்றை உறுதி செய்திடு.

 

ஜேப்பியார் தொழிற்நுட்ப கல்லூரி தொழிலாளர் சங்கம்

இணைப்பு : சோசலிச தொழிலாளர் மையம் (SWC)

9940963131, 9790729536

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW