மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு ஈகியர் வீரவணக்க நாள்!
வேதாந்தா கார்ப்பரேட்டின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடக் அறிவிப்பு நாள் முதல் தூத்துக்குடி மக்கள் எதிர்த்து வந்தனர். கடந்த காலப் போராட்டங்களில் மீனவர் கள் நடத்திய கடல்வழிக் கப்பல் முற்றுகைப் போராட்டம் வரலாற்றுச் சிறப்புடையது. விஷவாயுக் கசிவு பலமுறை நடந்ததன் விளைவு மக்கள் போராட்டங்கள் வீரியமடைந்தன. 2010இல் சென்னை உயர்நீதிமன்ற உத்ததரவுப்படி மூடப்பட்டது. 2013இல் 100 கோடி ரூபாய் அபராதம் அரசுக்குக் கட்ட வலியுறுத்தி டெல்லி உச்சநீதிமன்றம் திறக்க உத்தரவிட்டது.
2018இல் 100 நாட்கள் தொடர்ந்து நடந்த மக்கள் போராட்டம் மே 22 அன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த மக்கள் மீது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு. ஆட்சியார் உத்தரவிடவில்லை. தாசில்தார் உத்தரவின் பேரில் 15 உயிர்கள் பறிக்கப்பட்டன. முதலமைச்சருக்கு தொலைக்காட்சிச் செய்தி மூலமே தெரிய வந்தது. யார் உத்தரவில் நடந்த துப்பாக்கிச் சூடு! வேதாந்தா கார்ப்பரேட் நலனுக்காக மோடி சர்வாதிகாரக் கும்பலின் நேரடி உத்தரவு. கார்ப்பரேட் கைக்கூலிகள் நேரடியாகப் போராட்டக் களத்தில் இறங்கி நடத்திய துப்பாக்கிச் சூடு!
தூத்துக்குடி காவல்துறை இன்று வரை ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் மீது வழக்குககளைப் பதிவு செய்து சிறைப்படுத்தி வருகிறது.ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் நேரடிக் கூலியாட்களாகவே தமிழக அரசின் காவல்துறை இயங்கி வருகிறது. துப்பாக்கிச் சூடு எதிர்ப்புக் கண்டன நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதிக்காத நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே ஓரிரு
அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகநூல் பதிவாளர்களைக் கூட வழக்குப் போட்டு கைது செய்து மிரட்டி வருகிறது.
மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு அப்புறப்படுத்த வேண்டும். கொரானாக் காலத்தில் வேதாந்தா கார்ப்பரேட் கோடிகளை அரசுக்கு வழங்குவதன் மூலம் மீண்டும் திறக்க முயற்சிக்கிறது.
கொல்லப்பட்ட ஈகியரின் பெயரால் சபதமேற்போம்!
ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்துவோம்!
தூத்துக்குடியை துப்புறவுப்படுத்துவோம்!
தூத்துக்குடி மக்களுக்குத் தோள் கொடுப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிச ஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி