தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் கைதுக்கு கண்டனம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கடந்த 1.11.2017-ல் நடைபெற்ற மொழிவழி மாநிலம் உருவான நாளுக்கான கூட்டத்தில், ’தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் மீது பட்டுக்கோட்டை நகர காவல்துறை மத்திய, மாநில அரசுகளைப் பற்றி அவதூறாக பேசியதாக புதன்கிழமை (21.3.2018) அன்று வழக்குப்பதிவு செய்து .அவரை காரைக்குடியில் வைத்து கைது செய்துள்ளது. ஒருபுறம் கொரோனாவுக்கு எதிரானப் போர் என்று அறிவித்து ஒட்டுமொத்த நாடே சமூக விலக்கம், நோய்த் தடுப்பு முன்னெடுப்புகளில் இருக்கும்பொழுது தமிழக காவல்துறை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்காக நிலுவையில் உள்ள வழக்கிற்காக கைது செய்திருப்பது ஏதோ உள்நோக்கமும் அரசியல் ஒடுக்குமுறையையும் கொண்டிருப்பதை காட்டுகிறது இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கும் தோழரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்
பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
துரைசிங்கவேல், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி
மருதுபாண்டியன், சோசலிச மையம்
குணாளன், சி.பி.ஐ. எம்.எல்
அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
சித்தானந்தம் , சி.பி.ஐ.(எம் – எல்)
தமிழ்ச்செல்வன், சி.பி.ஐ. (எம் – எல்) ரெட் ஸ்டார்
டேவிட் செல்லப்பா, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
பாரி , தமிழ்த்தேச இறையான்மை
மாயக்கண்ணன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தங்க குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
சிதம்பரநாதன், கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலை
பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி
பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
ஏ.எஸ்.குமார், கம்யூனிஸ்ட் கட்சி
மாந்தநேயன், தொழிலாளர் போராட்ட இயக்கம்
பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி
மணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி
செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி
சாமிநாதன், கம்யூனிச புரட்சியாளர் ஒருங்கிணைப்பு குழு
பிரபாகரன் சக்திவேல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு இயக்கம்
தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி
தங்க குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
வழக்கறிஞர் கணேசன், மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி
அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி
தொடர்பு எண் – 70100 84440