கஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை!
ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்!
புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல் பேசிவிட்டோமோ என்ற துயர நிலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. சுனாமி தொடங்கி ஒக்கி புயல் வரை பெற்ற அனுபவம் , கடந்த 10 ஆண்டுகளில் 8 புயல்களை எதிர்கொண்ட அனுபவம் என அனைத்தும் ஓர் ஒருங்கினைந்த பேரிடர் மேலாண்மை இயந்திரத்தை உருவாக்கியுள்ளதோ என அரசின் நடவடிக்கைகள் தோற்றத்தை உருவாக்கின , ஆனால் நடந்து கொண்டிருக்கும் மீட்பு நடவடிக்கைகள் அதற்கு முற்றிலும் புறம்பாக உள்ளது.
- முற்றிலும் உருக்குலைந்த வேதாரண்யத்தின் நிலை அறிவதற்கே அடுத்த நாள் ஆனது, கடற்படையோ விமான உதவியோ கூட ஈடுபடுத்த தயார் இல்லை.
- புயல் செல்லும் பாதயை முழுமையாக கணிக்காததால் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, ஆலங்குடி, கறம்பகுடிஒரத்தநாடு, புதுக்கோட்டை, காரைக்குடி, மேலூர், கந்தர்வகோட்டை, திருச்சி, திண்டுக்கல்கொடைகானல், வரை நடந்த பாதிப்புகள் இன்னும் முழுமையாக மதிப்பிட முடியவில்லை.
- தென்னை, வாழை, பலா, தேக்கு, என பல்வகை மரங்கள் பல ஆயிரம் ஹெக்டேரில் முற்றிலும் வீழ்ந்து போயுள்ளன, இவற்றை அப்புறபடுத்தவே விவசாயிகளுக்கு பெரும் பொருட் செலவு ஆகும், இப்பகுதிகளின் வாழ்வாதாரமான இவை நீண்டகால பாதிப்புகளை கொண்டவை,மீட்பு நடவடிக்கைகள் இந்த கிராமங்களை இன்னும் எட்டி கூட பார்க்கவில்லை,
- மின்நிலைமை சீரமைக்கபடாததால் குடிதண்ணீருக்கே தட்டுபாடு ஏற்பட்டுள்ளது, ஆலங்குடி தொடங்கி வேதாரண்யம் வரை பல கிராமங்களில் மக்கள் ஆத்திரத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் இவர்கள் அறிவித்த எந்த பேரிடர் மேலாண்மை குழுவும் அங்கு செல்லவில்லை , சட்டமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் செல்வதற்கு அஞ்சிகொண்டிருக்கிறார்கள்.
- நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் முற்றிலும் நாசமடைந்துள்ளன, ஆயிரக்கணக்கான குடிசைகள்,சீட்டு ஓட்டு வீடுகள் நாசமடைந்துள்ளன இவர்களுக்கான மாற்று எதுவும் அறிவிக்கபடவில்லை
- உணவு, தண்ணீர் அடிப்படை வசதிகள் ஏதுமற்று தொற்று நோய்கள் பரவுவதற்கான சூழல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
- மத்திய மாநில அரசு ஒருங்கினைந்த எந்த நடவடிக்கைகளும் இல்லை,மோடி தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்,எடப்பாடி இன்னும் பகுதிக்கே செல்லவில்லை,பிறகு எப்போது சேத மதிப்பிட்டு பேரிடர் நிவாரணங்களை அற்விப்பார்கள்,கேரள வெள்ளத்திற்கே பேரிடர் என அறிவிக்க தயங்கியவர்கள் இதை எப்படி மதிப்பிடுவார்கள்,
- மாநில அரசின் பல்வேறு துறைகளை இறக்கி, அர்ப்பணிப்புள்ள சில அதிகாரிகளை முன்னிறுத்தி,மின்சாரம் போன்ற கட்டமைப்புரீதியான பணிகளை முடுக்கிவிட்டு, நிலைமை சீரடைந்துவிட்டது என கண்துடைப்பு நாடகம் நடத்துவார்கள்.
- ஏழை எளிய மக்கள் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து,வீடு வாசல்களை இழந்த்துள்ளார்கள்,மீனவர்கள்,விவசாயிகள்,சிறு தொழில் புரிவோர் பகுதி பொருளாதாரத்திற்கான உடைமைகளையும்,சொத்துக்களையும் இழந்துள்ளனர்.
- எனவே மத்திய மாநில அரசுகள் வெற்று அறிக்கைகள் வாசிப்பதை நிறுத்தி கொண்டுதுரித பணியில் இறங்ககோருகிறோம்,உடனடியாக அப்பகுதியை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்,நீண்டகால தாக்கம் கொண்ட பொருளாதார விவாசாய சேதங்களை மதிப்பிட்டு அப்பகுதிக்கான மாற்று திட்டங்களை அறிவிக்க வேண்டும்,துரித நடவடிக்கையை மேற்கொள்ள, தண்ணீர் உணவு,சுகாதாரமான முகாம்கள் அமைக்க படைத்துறையினரையும் ஹெலிகாப்டர் மற்றும் கடற்படை சேவையை பயன்படுத்த வேண்டும்,அரசின் பல்லாயிரக்கணக்கான சிவில் உழியர்களை உடனடியாக இறக்கி மக்களின் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் வேண்டுகிறோம்
- இறுதியாக,பேரிடர் மேலாண்மையிலுள்ள தோல்வியை ஒத்துக்கொண்டு எதிர்காலத்திற்கான திட்டமிடலை செய்யங்கள்,,மத்திய அரசிடம் சேதம் பல ஆயிரம் கோடி என அறிக்கை சமர்பித்துவிட்டு வழக்கம் போல சில நூறு கோடி ’பிச்சை போடுவதை’ போல பிடித்து கொள்ளாதீர்கள்,கிடைத்த பணத்தை மக்கள் குழுக்களை ஏற்ப்படுத்தி பகுதியின் மறுவாழ்விற்காக செலவழியுங்கள் திட்டசெலவு என கையில் பிடித்துவிடாதீர்கள்.
பாலன்
பொதுச்செயலாளர்,தமிழ்த்தேச மக்கள் முன்னணி
7010084440