தமிழக அரசே! ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவப் படுகொலையில் தொடர்புடைய காவல்துறை பணி செய்யும் சுர்ஜித்தின் தாய்,தந்தை இருவரையும் கைது செய்! சாதி ஆணவ கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசுக்கு கண்டனம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
கடந்த 27-05-2025 அன்று தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் என்பவர் சாதி கடந்து காதலித்த காரணத்திற்காக அவர் காதலித்த மறவர் சாதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணின் அண்ணன் சுர்ஜித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு...