தமிழக அரசே ! பிற மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணம் , கடனுதவிகளை வழங்கிவருவது போல தமிழக அரசு வழங்க வேண்டும் என சோசலிச தொழிலாளர் மையத்தின் பொதுச்செயலாளர் சதிஸ்குமார் வேண்டுகோள்.

22 Jun 2021

தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி, ஓரளவு கட்டமைப்பு வசதிகளையும் உயர்த்தி, மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கி இருப்பது ஆறுதல் தருகிறது.

அனைத்தும் ரேசன் கார்டுகளுக்கு நான்கு ஆயிரம், 13 வகையான மளிகைப் பொருட்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள்,கோவில் அர்ச்சகர்கள், கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் நிவாரணம் மற்றும் ஊக்கத் தொகையை அன்றாடம் அறிவிப்பு செய்து வருவது வரவேற்கத்தக்கது.

இவை அனைத்து செயல்களும் தமிழக அரசு மற்றும் அதிகாரிகளும் முதல் கொரோனா அலையில் பெற்ற  அனுபவமாக பார்க்க முடிகிறது. ஆனால் கடந்த முறை பொதுமுடக்கம் அறிவிக்கின்ற அன்றை தினமே ரேசன் கார்டுகளுக்கு  ஆயிரம் ரூபாய் மற்றும் சாலையோர  வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய்  என தமிழக அரசு அறிவித்தது.

மேலும் தொடர்ந்து மூன்று முறை ஆயிரம் ரூபாயை சாலையோர  வியாபாரிகளுக்கு அரசு வழங்கியது . அதோடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியம் வழியாக ஆயிரம் ரூபாய் வழங்கியது.

இதை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மே 19 அன்று அறிக்கையும் வெளியிட்டு தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மேலும், ஒரிசா அரசு சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத்தொகையாக  ரூபாய் 3000 நிதியை ஒரு வாரத்திற்கு முன் அறிவித்துள்ளது.

(https://www.hindustantimes.com/cities/others/odisha-announces-rs-29-cr-package-for-street-vendors-second-time-amid-pandemic-101623168646258.html. ) மத்திய அரசு PM Svanidi என்ற திட்டத்தின் கீழ் நிபந்தனைகள் எதுவுமின்றி ஓராண்டுகாலமாக நாடு முழுவதிலும் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வங்கிக் கடன்  உதவியை  வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாது இரண்டாவது அலையின் தாக்கத்தால் நலிவுற்றிருக்கும் வியாபாரிகளுக்கு மேலும் 20,000  ரூ கடன் உதவியை வழங்கும் அறிவிப்பை இதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.  (https://pmsvanidhi.mohua.gov.in).

பொதுமுடக்கம் அறிவித்து இன்றுடன் 50 நாட்கள் கடந்துவிட்டது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள்  சாலையோர வியாபாரிகளுக்கு முக்கியத்துவத்துவமளித்துள்ளது.  அத்தோடு, நிவாரணமும் கொடுத்து வருவதால்  காலம் கழிக்காமல் பின்வரும் கோரிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறோம்.

  1. அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு மூன்று மாதத்திற்கு ரூ. 3000 நிவாரண நிதியாக வழங்கிட வேண்டும்.
  2. தமிழகத்தில்THE TAMIL NADU STREET VENDORS (PROTECTION OF LIVELIHOOD AND REGULATION OF STREET VENDING) SCHEME AND RULES, 2015 என்ற சட்டத்தைநடைமுறைக்குக் கொண்டுவந்தபோது கணக்கீடு செய்ததில் 1,18,900 அடையாள அட்டை மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட வியாபாரிகள் மாநகராட்சியை அணுகி Letter of Recommendation (LOR)யை 2,41,056 பெற்றுள்ளனர்.  (https://pmsvanidhi.mohua.gov.in/Home/PMSDashboard) ஆக தமிழகத்தில் மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட 3,59,956 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடு.
  3. மேலும் 3.5லட்சம் வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் கடன் உதவியை தமிழநாட்டு சாலையோர வியாபாரிகளுக்குத் தர வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. (https://pmsvanidhi.mohua.gov.in/Schemes/DisbursementTargetsDetails.) இது வரை 89,345 பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர். விண்ணப்பித்துள்ள 2 லட்சம் விண்ணப்பதார்களுக்கு கடனுதவி  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
  1. அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமையாக்கி , யாரும் விடுபடாமல், பல சிறப்பு முகாம்களை அரசு நடத்தி உறுதிசெய்ய வேண்டும்
  2. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி இரயில், பேருந்து என அனைத்தையும் முழுமையாக இயக்க அரசு முன்வர வேண்டும்.

 

இப்படிக்கு

சதிஸ்குமார்

பொதுச்செயலாளர்-சோசலிச தொழிலாளர் மையம்

 9940963131

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW