சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை தீர்ப்பு; ஒளிந்திருக்கும் உண்மைகள்…
சேலம் சென்னை எட்டு வழி சாலை நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற division bench சிவநாமம், பவானி, சுப்பராயன் ஆகிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சேலம்- தர்மபுரி- கிருஷ்ணககிரி- திருவண்ணாமலை- காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் வழியாக ஆயிரத்து 900 ஏக்கர் விளைநிலங்களையும் கையகப்படுத்தி 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற நிலம் எடுக்கப்பட்டது. முழுக்க விவசாய மண்டல மான இப்பகுதியில் காலங் காலமாக வாழ்ந்து வந்த வேளாண் குடி மக்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி நிலங்களை கட்டாயப்படுத்தி அரசு பிடுங்கியது’
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் அரசியல் இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இயற்கை சூழலியல் ஆர்வலர்களும் கடுமையாக போராட்டங்களை நடத்தினர். விவசாயிகள் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
இத்திட்டம் வளர்ச்சித் திட்டம் என்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவைனெ்றும் அரசு வாதிட்டது.
சேலம் சென்னை எட்டு வழிச்சாலைக்கு பின்னால் அரசு வைத்திருக்கும் ராணுவ கண்ணோட்டத்தை வேறு சமயத்தில் பேசலாம். உயர் நீதிமன்றம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து விட்டதாக நேற்று முதல் ஊடகங்களில் மக்கள் குதூகலித்து வருகின்றனர். உண்மையில் நீதிமன்றம் திட்டத்தை ரத்து செய்ததா?
உயர் நீதிமன்ற தீர்ப்பு நிலம் எடுப்பதற்கான அரசானையை மட்டுமே ரத்து செய்துள்ளது. திட்டம் சரியா தவறா என்பதையோ, இதன் பாதிப்புகளையோ பேசவில்லை. ” எட்டு லழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கான அரசானையை ரத்து செய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வார காலத்திற்குள பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். சம்மந்கப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை வழங்க வேண்டும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அவசரகதியில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது.” என்கிறது தீப்பு.
தேர்தலுக்குகாக ஆட்சியாள்கள் மீதிருந்த வெருப்பை செரிக்கட்டவும், நீதிமன்நத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இது தெரிகிறது. தேர்தலுக்கு பிறகு மேல் முறையிரு செல்வோம் என அமைச்சரும் சொல்லிவிட்டார். புற வாசல் வழியாக வேகமாக திட்டத்தை அமல்படுத்தியதைதான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முறையாக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற்று, நில உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் கொடுத்து, நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி நிலம் எடுக்கலாம் என்பதுதான் நீதிமன்ற தீர்ப்பின் பொருள். கூடங்குளம், மீத்தேன் திட்டத்தில் நீதிமன்றம் என்ன செய்ததோ அதையே 8 வழி சாலை விவகாரத்தில் எதிர்பார்க்கலாம். சட்டத்தையும், முறைகளையும் கடைபிடிக்குமாறு தமிழக அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கைவிரித்து விடும் அபாயம் உள்ளது.
– விநாயகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி .