கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக !

20 Nov 2018

கஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப் போனப் புயல் ஏற்படுத்திய சேதமும் துயரமும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வைக்கும் இன்னும் போய் சேரவில்லை. உழவு, கலை, இலக்கியம், அரசியல், நாகரிகம், தொன்மம் என தமிழர் வரலாற்றிலும் வாழ்விலும் இருந்து பிரித்தெடுக்க முடியாத காவிரி நிலப்பரப்பு சின்னாபின்னமாகி கிடக்கிறது. குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் நாகை. புயலின் கோரத்தில் கூடிலிழந்த பறவைகளாய் உறவுகள் உள்ளனர். விழுந்து கிடக்கும் ஒவ்வொரு தென்னை மரமும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியின் பல்லாண்டுகால உழைப்பின் சேமிப்பு.

பெருமூலதனம் இன்னும் பாயாத விவசாய நிலப்பரப்பு, கிராமப்புறம், குடிசைப் பகுதி மக்கள் ஆகிய காரணங்கள் அரசின் மெத்தனத்திற்கு போதுமானது. தானே, வர்தா, சென்னைப் பெருவெள்ளம் என பேரிடர்களின் போது கையேந்திய மாநில அரசுக்கு மத்திய அரசு சில்லறை காசுகளை வீசியதை நாம் அறிவோம். அக்கறையற்ற மாநில அரசு ஒருபுறம். மாநில அரசு மடிப்பிச்சைக் கேட்டால்கூட கிள்ளிக் கொடுக்கும் தில்லி எஜமானர்கள் மறுபுறம். களத்தில் மின்கம்பத்தை நட்டு மின்பகிர்வை சீர்செய்வோர், வழித்தடத்தை சீரமைப்போர், இன்னபிற துயர்துடைப்பு பணியாற்றுவோர் என அல்லும்பகலும் பாடுபடும் அரசு மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுடன் கைகோர்ப்பதும் அலட்சியம் காட்டும் தமிழக ஆட்சியாளர்களுக்கு புரியும்படி களத்தின் தேவைகளை இடித்துரைப்பதும் தில்லி சுல்தான்களிடம் உரிய இழப்பீட்டு நிதி கோரிப் போராடுவதும் என பல்வேறு உத்திகளில் வினையாற்ற வேண்டியுள்ளது.

கஜா புயல் விட்டுச் சென்ற துயரத்தைப் பன்மடங்காக்கிக் கொண்டிருக்கிறது கனமழை. புயலிலும் மழையிலும் சிக்குண்டுள்ள காவிரிப் படுகையைக் காக்கும் கடமையில் தமிழ்நாட்டுத் தமிழரும் உலகத் தமிழரும் உடனடியாக ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

16 /11 அன்று முதல்  5 நாளாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 16 தோழர்கள் திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.  திருத்துறைப்பூண்டி நாகபட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை யில் இருந்து மேல கொற்க்கை கீழ கொற்க்கை கிராமத்திற்கு செல்லும் பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

அன்னை தெரசா பள்ளியை மையமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்களுடன் கைகோர்த்து துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட செயல்வீரர்கள் தேவை. மேலும் நிவாரண பொருட்களை விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்பு எண்கள்:

சதீஷ் : 99409 63131, அருண்சோரி: 72999 99168, பிரபாகரன் – 90959 12455 ரஞ்சித் குமார் – 78711 15357

இப்பணிக்கு துணைசெய்யும் வகையில் உடனடி தேவையாக இருப்பவை. ஊக்கமும் உணர்வும் உழைப்புத் திறனும் கொண்ட செயல்வீரர்கள் வேண்டும். மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இன்றியமையாப் பொருட்கள் பின்வருமாறு

  1. தார்பாய்
  2. போர்வை
  3. பாய்
  4. மெழுகுவர்த்தி
  5. எமர்ஜென்சி விளக்கு
  6. நாப்கின்
  7. கொசுவர்த்தி
  8. தீப்பெட்டி
  9. குடிநீர்
  10. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அளவு பாக்கெட்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட இன்றியமையா மளிகைப் பொருட்கள்
  11. மரம் வெட்டும் இயந்திரங்கள்
  12. புதிய ஆடைகள்

இப்பொருட்களை சென்னையில் இருந்து சேகரித்து அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

பொருட் சேகரிப்பு மையங்கள்:

  1. தமிழ்த்தேச மக்கள் முன்னணி அலுவலகம்,

முதல் தளம், 6, 70 வது அடி சாலை, சுப்புத் தோட்டம்,

கண்ணம்மாப்பேட்டை, தி.நகர்., சென்னை 600 017

தொடர்புக்கு: 99419 31499, 95001 86661

  1. 3/428, ஓ.எம்.ஆர்., கழிப்பட்டூர், சென்னை 603 103.

TVH.  ouranya bay – behind Primus Super Market..

தொடர்புக்கு: 9884318227, 9840713315

#SaveDelta

#peoplefront

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW