காஷ்மீர் குறித்து முகநூலில் எழுதியதற்காக வழக்கு ! – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு ! காவி – கார்ப்பரேட் அடிமை எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம் !
கடந்த ஆண்டு 2018, சூலை 08 அன்று மதுரை மாட்டுத்தாவணி எதிரில் இராமசுப்பு அரங்கில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஏற்பாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை – அரச பயங்கரவாதத்தை கண்டித்து அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உ]ரையாற்றிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தோழர் தியாகு, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் குமரன் ஆகியோர் மீது 31 – 08 – 2019 அன்று மதுரை – கே.புதூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
முகநூலில் காஷ்மீர்- 370 குறித்துப் பதிவேற்றம் செய்தமைக்காக பு.இ.மு. தோழர் குமரன் மீது மதுரை – செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அரங்கக் கூட்டத்தில் பேசியவர்கள் மீது ஓராண்டு கழித்து வழக்கு! முகநூல் பதிவுக்கு வழக்கு !
என்ன நோக்கம்? யாரை முடக்க? எதைத் தடுக்க?
ஸ்டெர்லைட் கைக்கூலி அரசின் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காஷ்மீர் – 370 இரத்து, யூனியன் பிரதேசமாக உடைத்த மோடி – அமித்சா அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தோழர்களே! மக்கள் இயக்கங்களே!
கருத்துரிமையைப் பறிக்கும் அரசின் காவல் துறைக்கு எதிராகக் கண்டனத்தைப் பதிவு செய்க!
தோழமையுடன்,
மீ. த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி