காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்;  அறிக்கை போரும் கள யதார்த்தமும்.

14 May 2019

நடந்து கொண்டிருக்கிற கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த களத்திற்கு வர அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் …….

 

2012 தொடங்கி மீத்தேன் திட்டத்துக்கு எதிராக காவிரிப் படுகையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பிறகு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டமாக மாறி பல்வேறு கிராமங்களில் எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பல்வேறு அமைப்புத் தோழர்கள் மீதும் கிராம மக்கள் மீதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அண்மையில் நடந்த நாங்கூர் போராட்டத்திலும் கரியாப்பட்டினம் போராட்டத்திலும் கூட, நமது தோழர்கள் உட்பட கிராம மக்கள் பலரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட கட்சிகள் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்த கட்சிகள் பொதுத்துறை நிறுவனம் நாட்டின் நலனில் இருந்து எண்ணெய் எடுக்கிறது எனவே திட்டத்தை எதிர்க்க கூடாது என சொல்லிய கட்சிகள்,  இன்று இயக்கங்கள் மற்றும் மக்கள் போராட்டத்தின் விளைவாக எண்ணெய் எரிவாயு திட்டங்களை சொல்லளவில், அறிக்கை அளவில் எதிர்க்க தொடங்கியுள்ளன.

தேர்தல் நேரத்தில் அதிமுக பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும்  திட்டத்தை எதிர்ப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தன. தேர்தல் நேரத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கமும் தமிழ் தேச மக்கள் முன்னணியும் 100 விவசாயிகளை இத்திட்டத்திற்கு எதிராக தேர்தலை போராட்டக் களமாக மாற்ற வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் தேர்தல் நேரத்தில் துரோகத்தனமாக இத்திட்டத்திற்கான புதிய ஏலத்தை, ஒப்பந்தங்களை அறிவித்துக் கொண்டே இருந்தன.

அதுமட்டுமன்றி எரிவாயு எடுத்துச் செல்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதாணத்திலிருந்து மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் குழாய் பதிக்க தொடங்கியது. இதற்கு எதிராக விவசாய வேட்பாளர்களும் நமது இயக்கத் தோழர்களும் சக இயக்கங்களை சார்ந்தவர்களும் நாங்கூர் கிராம மக்களும் குழாய் பதிப்பை தடுத்து நிறுத்தி வருவாய் மற்றும் காவல்துறையினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக அத்திட்டத்தை தடுத்து நிறுத்தினர் ஆனால் அடுத்த நாள் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் முடிந்த சில நாட்களில் கண் துடைப்புக்காக ஒரு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இன்றைக்கு வேகவேகமாக காவல்துறை ஒடுக்குமுறையோடு கெயில் குழாயை பதித்து கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிற அனைத்துக் கட்சிகளுக்கும் அக்கிராமங்களில் கிளைகள் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் போராட்டக் களத்தில் தான் இல்லை! தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்ற பழமொழி உண்டு அது போல் தான் இவர்களின் அறிக்கைகளும் ஆகவே இவர்கள் அறிக்கையிலிருந்து அடுத்த கட்டமாக செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 

பாலன்
பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW