ஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்!

11 Nov 2018

#தஞ்சை_பாரத்_கல்லூரி_முதல்வருக்கு_கண்டனம்
காவிரிப் படுகையை பாலைவனமாக்கத் துடிக்கும் மீத்தேன் ஹைட்ரோ-கார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக நமது தாய் மண்ணைக் காக்க தமிழ்நாடு மாணவர் இயக்கம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு மாணவர் இயக்க தோழர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகளை காவல்துறை புனைந்து வருகின்றது. அதேபோன்று தமிழ்நாடு மாணவர் இயக்க பொது செயலாளர் தோழர் ஜெ.பிரபாகரன் மீது ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்ததனால் காவல்துறை பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.  பிணையில் வெளிவந்துள்ளார் இந்த பொய் வழக்கின் அடிப்படியில் தஞ்சாவூர் பாரத் கல்லூரி முதல்வர் வீராசாமி அவர்கள் தோழர் ஜெ.பிரபாகரனை கல்லூரியில் இருந்து நீக்குவதாக அடாவடியாக அறிவித்துள்ளார். பிணையில் வந்த தோழரை குற்றவாளியா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றமே, கல்லூரி முதல்வர் அல்ல. குற்றவாளி என்று நிருபிக்கும் முன்னே கல்லூரியில் படிப்பை தொடரவிடாமல் தடுத்து கல்லூரியை விட்டு நீக்குவது என்பது கல்லூரி முதல்வரின் உச்சபட்ச அடாவடி தனம் பல்வேறு சமுக்குத்திர்க்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்கு வாங்கியவர்களே கல்லூரியில் படிக்கும் போது மக்களுக்காக போரடகூடிய மாணவர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் கல்விகற்கும் உரிமையை தட்டி பறிக்கும் தஞ்சை பாரத் கல்லூரி முதல்வர் வீராசாமியின் நோக்கம் என்ன ?

காவல்துறை பொய்யாக புனைந்த வழக்கிற்காக ஒருமாதம் கழித்து தோழர் பிரபாகரனை நீக்கிய கல்லூரி முதல்வருக்கும் காவல்துறைக்கும் என்ன தொடர்பு ? மக்களுக்காக போராடும் மாணவர்களின் கல்வியை பறிக்கும் தஞ்சை பாரத் கல்லூரி முதல்வர் விரசாமயையும் இதை போன்று செயல்படும் கல்லூரி நிர்வாகங்களையும் தமிழ்நாடு மாணவர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

சமுக அக்கறையுள்ள அனைத்து தோழர்களும் தஞ்சை பாரத் கல்லூரி முதல்வரின் மக்கள் விரோத செயலை கண்டிப்போம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், 8 வழி சாலை என்று மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடும்  மக்களையும், இயக்கங்களையும் கடுமையாக ஒடுக்குமுறை செய்து வருகிறது.

அரங்க கூட்டம் முதல் பொதுக்கூட்டம் வரை அனைத்திற்கும் அனுமதி மறுப்பு – தடை !

எழுதினால், பேசினால், போராடினால் பொய்வழக்கு – கைது – சிறை!

மக்கள் விரோத காவி – கார்ப்ரேட் கொள்கைகளின் நாயகன் மோடிக்கு அடிமை சேவகம் செய்துவரும் எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம், தோழர் பிரபாகரனின்  கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!

 

அருண்சோரி
மாவட்ட செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி                                                                                                                                                                               

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW