தமிழ்நாடு அரசே! பேராசிரியர் ஜவஹர்நேசனையும் உள்ளடக்கி மாநிலக் கல்விக் கொள்கைக்கான வல்லுநர் குழுவை மறுசீரமைத்திடுக! தமிழ்நாட்டிற்கான தனித்துவமான சனநாயகக் கல்விக் கொள்கையை உருவாக்குவதை உறுதிசெய்திடுக!தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை
தமிழ்நாட்டிற்கு என்று தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் பன்னிருவர் அடங்கிய வல்லுநர் குழுவொன்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 இல் உருவாக்கியது தமிழ்நாடு அரசு. அக்குழுவில் இருந்து முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன்...