காவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்! – செந்தில்
(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) காவிரி கரை புரண்டோடுவதை தமிழகம் காண்கிறது. தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பிவிட்டன. வெள்ள நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை ஆணையம்...