சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட தமிழக அரசு ’சிறப்புச் சட்டம்’ இயற்றவேண்டும் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பு
இன்று, 20.07.2021, தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட ராஜஸ்தான் மாநில அரசு சிறப்புச் சட்டம் இயற்றியதுபோல், தமிழக அரசு சிறப்புச்சட்டம் இயற்றக்கோரி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அவர்களிடம் சாதி ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுலைக்கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி அமைப்பினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன் மனு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
- உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழக அரசு சாதி ஆணவக்கொலைகளை-சாதிரீதியான வெறுப்புக்குற்றங்களைத் தடுத்திட சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்.
- சிறப்புத்திருமணச்சட்டம் 1954 ல் மதம் மாறி திருமணம் செய்ய விரும்புவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறையை நீக்க வேண்டும்.
கோரிக்கை மனு (PDF download link) – சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட ’சிறப்புச்சட்டம்’
ரமணி, பொதுச்செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி
8508726919,