பாசக தடைகளைக் கடந்து மதுரை வடக்கு பாசக வேட்பாளரைத் தோற்கடிக்க பரப்புரை இயக்கம்.

08 Apr 2021

மார்ச் 13 அன்று மதுரை மண்டல மக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் மதுரை வடக்கு, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாசக எதிர்ப்பு பரப்புரை திட்டமிடப்பட்டது.

மார்ச் 19 அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் தெய்வம்மாள் மதுரை வடக்கு தொகுதியிலும், குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கத் தோழர் பிரேம்குமார் காரைக்குடி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மறுநாள் பரிசீலனையில் மதுரை வடக்கு தொகுதியில் தெய்வம்மாள் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரைக்குடி தொகுதியில் பிரேம்குமார் வேட்புமனு மறுக்கப்பட்டது.

மார்ச் 22 அன்று வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் 24 அன்று செல்லூர் பகுதிகளில் வீடுவீடாக பாசகவைத் தோற்கடிக்க வேண்டி பரப்புரை தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே மீனாட்சிபுரத்தில் பாசக நேரடித் தகராறு தொடங்கியது, சமாளித்தோம். இரண்டாம் நாள் நரிமேடு பகுதியில் நான்கு பேர் பரப்புரைக் குழுவைத் தடுத்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல்துறை தலையீட்டில் கலைந்து சென்றனர். மார்ச் 29 அன்று புதூர் பொதுக்கூட்ட அனுமதி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டு நமக்கு மறுக்கப்பட்டது. பின்னர் புதூர் உள்பகுதியில் தெருமுனைப் பொதுக்கூட்டம் அனுமதி வழங்கப்பட்டு நடந்தது.

மார்ச் 30 அன்று மீனாம்பாள் புரத்தில் தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பாசகவினரின் குழு வந்து திரும்பிச் சென்றது.

மார்ச் 31 முதல் ஏப்ரல் 04 வரை வாகனம் மற்றும்  ஒலிப்பெருக்கியுடன் செல்லூர், 50 அடி சாலை, 60 அடி சாலை, கட்டபொம்மன் நகர், சுயராஜ்யபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், ஜம்புரோபுரம் மார்க்கெட், கே.கே.நகர், அண்ணாநகர், மேலமடை, எஸ்.எம்.பி.காலனி, புதூர், கிருஷ்ணாபுரம் காலனி, மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை நடத்தப்பட்டது.

தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம், தமிழ்த்தேச விடுதலை இயக்கம், குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழக மக்கள் பண்பாட்டு கழகம், ஏழு தமிழர் விடுதலைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர்.

“பாசகவைத் தோற்கடிப்போம்! ஏன் பாசகவுக்கு வாக்களிக்கக் கூடாது?” எனும் 23 விஷயங்கள் உள்ளடக்கிய 10,000 துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

திட்டமிடலில் பங்கெடுத்த அமைப்புகளில் சில செயல்பாடுகளில் பங்கேற்கவில்லை. கூட்டணி அரசியலின் தாக்கம் அதிகமிருந்தது. பாசகவுக்கான எதிர்ப்பு பரவலாக இருந்தது.

 

மீ.த. பாண்டியன்,

தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

மக்கள் இயக்கங்கள் – மதுரை மண்டலம்

9443184051

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW