கொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு! தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.

01 Jun 2020

தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 173 பேர் உயிரிழந்துள்ளனர், இன்றுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கியிருக்கிறது, தொற்று எண்ணிக்கை ஜீரோ ஆக்கி விடுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி ஒரு மாதங்களுக்கு மேலாகிறது, இதுநாள் வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி, நாட்களை சொல்லி தொற்றை கட்டுப்படுத்தி விடுவோம் என சொல்லி வந்த முதல்வரும் அதிகாரிகளும் இப்பொழுது அதைக் கூட சொல்வதற்கு தயாராக இல்லை, நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்து கொண்டிருக்கிறது, தலைநகர் சென்னையில் சமூக பரவல் தீவிரமடைந்து மரணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் எவ்வித கொள்கையும் திட்டமிடலும் தெளிவாக இல்லை, சீனாவில் ஊகான் மாகாணத்தில் இரண்டாவது முறையாக சீன அரசு ஒட்டுமொத்த 68 லட்சம் மக்களையும் 12 நாட்களில் பரிசோதனை செய்து இருக்கிறது. ஒரே நாளில் 14 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்கின்ற அளவிற்கு கருவிகளை, கட்டமைப்பு வசதிகளை கொண்டு தொற்று நோய் பரவலை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 60 நாட்களில் நாலு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது, தென் கொரியாவில் இருந்து இறக்குமதிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட பத்துலட்சம் கருவிகளை கூட இறக்குமதி செய்ய முடியவில்லை ஆனால் தீவிரமாக பணியாற்றுவது போல எதிர்க்கட்சிகளை, மக்களை குற்றம் சாட்டி  கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கிறார்கள். மக்கள்தான் வருகின்ற நெருக்கடிகளையும் மரணங்களையும் சந்திக்க வேண்டும் என கைவிட்டு உள்ளார்கள்.

 

இந்த சூழலில்தான் தமிழ்த்தேச மக்கள் முன்னணி திருச்சி மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ரகு மக்கள் மீதான அக்கறை உணர்வோடு, எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி உள்ளார். கொள்ளை நோய்க்கு மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிற இந்தக் கொடுங்கோல் அரசு, மக்களின் இளைஞர்களின் நீதியான ஆவேசத்திற்கு, கண்டனத்திற்கு பதில் சொல்லாமல் மக்களின் மீது கருணையும் உதவுகின்ற மனப்பான்மையும் கொண்ட தோழர் ரகு மீது தேசத்துரோக வழக்கு கோழைத்தனமாக புனைந்து இருக்கிறது.

 

பரிசோதனைக் கருவிகள் வாங்குவதற்கு பணம் தராத மத்திய அரசு, இருக்கின்ற பணத்தை செலவிட தயாராக இல்லாத எடப்பாடி பழனிச்சாமி கும்பல் தேசபக்தி கனவான்கலாம், மக்களின் மரணங்களை கண்டு கொதித்து எழும் தோழன் ரகு தேச விரோதியாம், மானங்கெட்ட எடப்பாடியே உன்னைப்போல் டெல்லிக்கு கால் பிடித்துவிடும் கூட்டம் அல்ல எங்கள் இளைஞர் கூட்டம் ஒருவனுக்கு தேசவிரோத சட்டம் புனைந்து இருக்கிறாய், அமெரிக்காவின் வீதிகளில் கிளர்ந்து எழுகின்ற இளைஞர்கள் போல் எம் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன செய்வாய், உருவபொம்மையை எரித்தால் Cr. No: 1949/2020, U/s 124(A), 285, 153, 505(1)(b) IPC… தேசத்துரோகம் எந்த சட்டத்தில் இருக்கின்றது, பரிசோதனை கருவிகளை வாங்காமல் நோயை கட்டுப்படுத்தாமல் மக்களை கொல்கின்ற உங்களை எந்த சட்டத்தில் வழக்கு பதியலாம், மக்கள் மீது கருணையும் உங்கள் கொடுமையின் மீது கோபமும் கொண்டிருக்கிற இளைஞர்களை கொடுஞ்சிறையில் தள்ளாதே, வழக்கை திரும்பப்பெறு, கொள்ளை நோய் பரவலையும் மரணத்தையும் கட்டுப்படுத்து, மோடியிடம் பணியாதே, ஒரு கோடி கருவிகளை இறக்குமதி செய், பரிசோதனைகளை தீவிரப்படுத்து.

 

-பாலன்

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW