மே தினம் நீடூழி வாழ்க! முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! கொரோனாவே சாட்சி! சோசலிசமே மீட்சி!

30 Apr 2020

அனைவருக்கும் உணவு, வேலை, நல்வாழ்வை உறுதிசெய்ய உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்! சோசலிசம் படைத்திடுவோம்!

 

மே தின கருத்துரை – காலை 10.30 மணி முதல் – 11.30 வரை  

தலைமை உரை:

தோழர் சதீஸ்,

பொதுச்செயலாளர், சோசலிச தொழிலாளர் மையம்

 

10.30 – 10.50

(20 நிமிடம்)

 

கருத்துரை:

தோழர் விநாயகம்,

தலைவர், சோசலிச தொழிலாளர் மையம்

 

10.50 – 11:10

 

(20 நிமிடம்)

 

கருத்துரை:

தோழர் பாலன்,

பொதுச்செயலாளர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)

 

11:10 – 11:30

(20 நிமிடம்)

 

நேரலை: மக்கள் முன்னணி ஊடகம் – https://www.facebook.com/Peoplesfronttamilnadu/

அன்பார்ந்த தோழர்களே!
கொரோனா நோய்த்தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இவ்வளவு பெரிய மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் இந்நோய் கிருமியை எதிர்கொள்ள முடியாது முதலாளித்துவ அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன… மருத்துவத் துறையை முழுமையாக தனியார் மயமாக்கிய ”வளர்ந்த” ஏகாதிபத்திய நாடுகளில்தான் மரணத்தின் எண்ணிக்கை மிக அதிகம். மக்களின் தொடர் போராட்டத்தால் பாதுகாத்து வைக்கப்பட்ட பொது சுகாதார அமைப்பினால்  இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று உயிரிழப்புகள் குறைவு என்றாலும் அதைவிட பட்டினிச் சாவுகள் உயர்ந்து கொண்டே செல்கிறது.  ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 200 பேர் உயிரை விட்டிருக்கிறார்கள்… கணக்கில் வராத இன்னும் பல உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.  இது கொரோனோ உயிரிழப்பைவிட அதிகமாகும்.  கொரோனா நோய்க்கிருமியில் இருந்து மனிதகுலத்தை காக்க முன்வரிசையில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மரணத்தோடு போராடிவருகிறார்கள்
பரிணாம வளர்ச்சியில் மனித சமூக வளர்ச்சியின் அடிப்படை உழைப்புதான்.  ஆனால் இன்றைய ஏகாதிபத்திய உலகம் கடந்த இரண்டு மாதங்களாக ஒட்டுமொத்த மனித உழைப்பையும், உற்பத்தியையும் முடக்கி இருக்கிறது. மனிதகுலத்தைப் பட்டினியில் தள்ளி இருக்கிறது.  இது போலான நிகழ்வுகளை மனிதகுல வரலாறு இதற்கு முன் கண்டதில்லை. கார்ப்ரேட்டுகளின் நலனை மட்டுமே விரும்பும் தீவிர இந்துமதவெறி பாசிசத்தை நோக்கி வளர்ந்துவரும் அரசு இந்தியா முழுவதும் மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து ஒட்டு மொத்த நாட்டையே முழுவதுமாக முடக்கியிருக்கிறது.

 

இதே காலகட்டத்தில் வடக்கே இருக்கும் சில மாநில அரசுகள்  8 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது . தமிழக அரசு அடுத்த ஓராண்டு காலத்திற்கு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்தி இருக்கிறது.. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயைக்கூட முறையாக வழங்க வக்கில்லாமல் பட்டினிசாவைப் பரிசளித்த  எடுபிடி ஆட்சியாளர்கள், மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் வாங்கியதில்கூட ஊழல் செய்து கொண்டு இருக்கின்றனர்.  மாநில  அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி.  வரிப்பணத்தை கொடுக்காத  மத்திய அரசோ பொதுசொத்தை சூறையாடும் ஐம்பது கார்பரேட் முதலாளிகளுக்கு 68,607 கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து இருக்கிறது.

நாடு முழுவதும் பெருவாரியான தொழிளாலர்களை கொண்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்துறைகள் பணமதிப்பிழக்க நடவடிக்கை, GST உள்ளிட்ட அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நசிந்துபோய் சிக்கலில்  இருக்கக் கூடிய நிலையில் இந்த தொழில் முடக்கம் என்பதான சூழல் பல்வேறு பன்னாட்டு வணிக ஏற்றுமதி ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டு மேலதிகமான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இது உள்நாட்டில் மிக மோசமான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

உலக அளவிலும் கொரோனோவிற்குப் பிந்தய காலம் மாபெரும் அரசியல் பொருளாதார மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. நிலவுகிற பொருளாதார மந்தம் இரண்டாம் உலகபோருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு காலாவதியாகி வருவதை உணர்த்துகிறது. 80களின் நவதாராளவாத உலகமய சகாப்தம் தனது இறுதிகாலத்தை எட்டுயிருக்கிறது. உலகத்தின் எஜமானாக தன்னைக் கருதி வந்த அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் தேசத்தின் எல்லைகளை மூடிவிட்டார்கள். அந்நியர்களை ( புலம்பெயர்ந்தவர்களை) வெளியேற்றுவது குறித்த சட்டத்திட்டங்களைத் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தேசிய வெறியின் மூலமும். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பூச்சாண்டி காட்டுவதன் மூலமும், மத,இன,மொழி வெறுப்பு அரசியலைத் தூண்டிவிடுவதன் மூலமும் வெறியூட்டப்பட்ட மக்களின் ஆதரவோடும்  வலதுசாரி பாசிச அரசின் மூலமும்  தங்கள் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள உலக நிதிமூலதன சக்திகள் முயன்று வருகின்றன.

 

வருங்காலம் பற்பல பிரெஞ்சு புரட்சிகளையும், சோவியத் எழுச்சிகளையும், மக்கள் சீன விடுதலை யுத்தங்களையும் காண இருக்கிறது ஆனால் அதை வழிநடத்தவேண்டிய உலகப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய அரசியல் தத்துவார்த்த தலைமையின் கீழ் அணிதிரட்டப் படாமல் சிதறி கிடக்கிறது. அல்லது திரிபுவாத தலைமையினால் காயடிக்கப்பட்டிருக்கிறது, நாம் நமது சொந்த வரலாற்றின் தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தோழர்களே. வெற்றியை நோக்கி முன்னேறுவோம். சோசலிசத்திற்கே எதிர்காலம்.

 

1886 ஆம் ஆண்டு சிகாகோ நகரில் எட்டு மணி நேர வேலை நாள் என்ற முழக்கத்தோடு தொழிலாளி வர்க்க இயக்கம் போராடி வெற்றிவாகை சூடிய நாள் மே 1…. இதே நாளில்   சிகாகோ நகர வீதியில் சிந்திய தொழிலாளிகளின் இரத்தத்தில் தோய்ந்த செங்கொடியை உயர்த்தி உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வெற்றியிலிருந்து உத்வேகத்தைப் பெறுவோம்

 

 

மத்திய, மாநில அரசுகளே!

  1. கொரோனா சுகாதார அவசரநிலையை பயன்படுத்தி 8 மணிநேர வேலைநேரத்தை 12 நேரமாக அதிகரிக்கும் முயற்ச்சியை கைவிடு!

 

  1. உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களில் ஒப்பந்தமுறையை ஒழித்திடு! பல ஆண்டுகள் காத்திருக்கும் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக நியமித்திடு! போதிய உபகரணங்கள் மற்றும் சிறப்பு காப்பீட்டை வழங்கிடு!

 

  1. துப்புரவு பணியாளர்களையும் ‘சுகாதார’ பணியாளர்களாக கருதவேண்டும், மாநகராட்சி/நகராட்சி நிரந்தர பணியாளர்களாக நியமித்திடு! போதிய உபகரணங்கள் மற்றும் சிறப்பு காப்பீட்டை வழங்கிடு! ‘கையால் மலமள்ளும் தடைச் சட்டத்தை’ முழுமையாக அமல்படுத்து! நவீன இயந்திரங்களை பயன்படுத்தி உயிர் இழப்புகளை தடுத்திடு!

 

  1. சம வேலைக்கு ஏற்ற ஊதிய கொள்கையை” அமல்படுத்து! பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்த்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கு!

 

  1. அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு! தொழிலாளர் சட்டங்களை மீறுகிற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடு!

 

  1. உள்நாட்டு, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றிடு!

 

  1. கல்வி, சுகாதாரம், போக்குவரத்துக்கு, ரயில்வே, தண்ணீர் மற்றும் இதர மக்கள் நலன் சார்துறைகளை தனியாரிடம் ஒப்படைக்காதே! அரசுடைமையாகிடு!

 

  1. கொரோனா ஊரண்டங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பட்டினிச்சாவுகளை தடுத்திடு! 10 கோடிக்கு மேற்பட் டோர் பொது விநியோக திட்டத்தில் விடப்பட்டுள்ள நிலையில், உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய குடும்ப அட்டை இல்லாத மக்களையும் உள்ளடக்கிய பொது விநியோகத்திட்டத்தை அனைவருக்குமானதாக மாற்றி அமைத்திடு! (Universal PDS). உணவு தானியங்கள் வீணாவதை தடுத்து  உணவு சேமிப்பு கழகத்தின்  (Food Corporation of India) கட்டமைப்பை பலப்படுத்து

 

  1. விளிம்பு நிலை மக்களுக்கு பயன்தரும் வகையில் அம்மா உணவகம் திட்டணத்தை விரிவுபடுத்து! அடுத்த மூன்ற மாதத்திற்கு இலவசமாக உணவு வழங்கிடு!

 

  1. பொருளாதாரநெருக்கடி காலத்தில் பெரிதும் பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களை வறுமையிலிருந்து மீட்டிட குறைந்தபட்ச வருமான திட்டத்தை (Universal Basic Income) அமல்படுத்து. குடும்பத்திற்கு மூன்று மாதத்திற்கு ரூ.6000/-  வழங்கிடு. சொற்பமான  எண்ணிக்கையில் மட்டுமே நலவாரியத்தில் பதிந்துள்ள நிலையில், அனைவரையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

  1. பயணிகள் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு FC கட்டணத்தை ரத்து செய்! ஆண்டுக்கான காப்பீட்டு கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்!

 

  1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை முழுமையாகவும் அமல்படுத்து! நூறு நாள் என்பதை ஆண்டுமுழுவதுமாக விரிவுபடுத்து!

 

  1. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் சிறு – குறு தொழில்கள் பாதுகாத்திடு! தொழில்துறைக்கு ஏற்ப நிவாரண நிதி வழங்கு, கடன் அளவை அதிகப்படுத்து, வருமான வரியை ஓராண்டுக்கு தளர்த்து! அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் சிறு குறு தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கிடு!

 

  1. முறைப்படுத்தப்பட்ட தொழில் மற்றும் சேவை துறையில் நிரந்தர பணியாளர்களை பணிநீக்கம் செய்வதை நிறுத்த ஆணையிட்டு! பேரிடர் காலத்து ஊதியத்தை வழங்க வழிவகை செய்! உற்பத்தி குறைவாக உள்ள சூழலில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வாங்கீட்டு! ஊதிய காப்பீடை (wage insurance) பரிசீலனை செய்! சந்தை நுகர்வை அதிகரிக்க ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை வருமான வரியை தள்ளுபடிசெய்!

 

  1. பொருளாதார நெருக்கடிநிலையை பயன்படுத்தி தொழிசங்க உரிமைகளை மறுக்காதே! தொழிலாளர் நலனை உறுதிசெய்ய அணைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட்டு!

 

  1. பிரதம மந்திரி விவசாய உதவி தொகை திட்டத்தில் (PM-KISAN) 8.69 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 6000 பணம் அளிப்பது என்ற திட்டத்தை விரிவுபடுத்தி ஆண்டுக்கு ரூ 12000 வழங்கிடு. சிறு – நடுத்தர விவசாயிகளுக்கு விதை மற்றும் உரம் விலையில் உள்ள மானியத்தை அதிகரித்திடு! வாரா கடனை தள்ளுபடிசெய்! வட்டியில்லா கடன் வழங்கிடு!

 

  1. பொருளாதார நெருக்கடிநிலையில் இருந்து மீள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 விழுக்காடு முதல் 10 விழுக்காடு நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்!

சோசலிச தொழிலாளர் மையம்

9940963131 / 9994094700

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW