இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை மதுரை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையினரின் தாக்குதலில் மரணமுற்றார் – கண்டனம்
தாக்கிய காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்களும், ஊர் மக்களும் போராடினர் என்பது சன் மற்றும் புதிய தலைமுறை தொலைக் காட்சிகளிலும், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் கண்டோம்.
இறப்பின் உண்மைத் தன்மை அறியாமலே பிணக் கூறாய்வு நடக்காமலேயே உடலை அடக்கம் செய்வது என்ன வகைச் சட்டம் – தர்மம்? அனைத்துப் பிரச்சனைகளையும் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளாக மட்டுமே அரசும், காவல்துறையும் கையாள்வது கொரோனாக் காலத்திலும் தொடர்கிறது.
20 பேர்கள் மட்டும் பங்கேற்க அனுமதியுடன் உடனடியாக மதியத்திற்குள் அடக்கம் செய்ய காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இச்செயல் சரியா?
தோழர் இரபீக் சென்னையிலிருந்து மதுரை வருவதற்கான அரசு அனுமதிக் கடிதம் பெற்றுக்கிளம்பும் முயற்சியில், தோழர்களின் உதவியுடன் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசே!
- காவல்துறையின் கொடுஞ் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- படுகொலை செய்த காவலர்களைக் கைது செய்!
- அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு வருபவர்களைத் தடி கொண்டு தாக்குவதை நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்!
- அரசும், காவல்துறையும், இஸ்லாமிய விரோதச் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்!
– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி