கொரானா-முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் பொறுப்பேற்க வேண்டும்!

04 Apr 2020

கொரானாவை விட கொடிய தொற்றாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரானா பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்ற வெறுப்பு பிரச்சாரத்திற்கான கருத்துக்களை பல்வேறு வடிவங்களில் தயாரித்து சமூக ஊடகங்களில் குறிப்பாக உள்ளூர் அளவிலான வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பிக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்-பிஜேபி சங்பரிவார கும்பல். கொரானா உள்ளூர் மட்ட அளவிலான (community decease) மூன்றாம் கட்டத்திற்கு பரவவில்லை என அறிவித்துக் கொண்டே அதைவிட வேகமாக உள்ளூர் மட்ட அளவில் கொரானாவோடு சம்பந்தப்படுத்தி முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தை சமூக மயமாக்கி கொண்டிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? இந்த வெறுப்பு பிரச்சாரத்தால் லாபம் அடைய துடிக்கிற கும்பல் எது?

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ்ம்தான் தாங்கள் வெளியிட்ட அறிக்கைகளில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு மதக் குழு கொரானாவோடு நடமாடிக் கொண்டிருக்கிறது என்ற கருத்தை திரும்பத் திரும்ப முன்வைத்தார்கள், இந்த கருத்து சங்பரிவார சக்திகளால் விபரீதமான வெறுப்பு பிரச்சார வடிவத்தில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது, முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எப்பொழுதும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சதிகார கும்பலுக்கு மேற்கண்ட இருவரின் முஸ்லிம் எதிர்ப்பு, இந்துமத  சார்பு கொண்ட, நேரத்திற்கு பொருத்தமற்ற மூடத்தனமான கருத்துக்கள் பயன்பட்டிருக்கிறது, இப்பொழுது அதன் விளைவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், பிரச்சினை தீவிரமடைந்து விமர்சனத்துக்கு ஆளான உடன் பீலா ராஜேஷ் தானாக முன்வந்து பரிசோதனை மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிப்பதும் எடப்பாடி பழனிச்சாமி கலவர கருத்துகளை விதைக்கிற எச் ராஜா உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலை கண்டிக்காமல் கைது செய்யாமல் அரசு செயலாளர்கள் தலைமையில் சிறுபான்மை மத தலைவர்களை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாடகத்தை நடத்தி இருப்பதும், இவர்கள் உருவாக்கிய கருத்தினால் நடந்து கொண்டிருக்கிற மோசமான சம்பவங்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் தப்பித்துக்கொள்ள பார்ப்பதையே காட்டுகிறது, தென்காசியிலும் தண்டையார்பேட்டையிலும் நோய்த்தொற்று பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட இஸ்லாமியர்கள் தற்காலிக மருத்துவமனைகளில் தங்க வைப்பதற்காக அப்பகுதியினர் இடமிருந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களிடம் பாகுபாடு காட்டுவது விலகிச் செல்வது விலக்கி வைப்பது தனிமைப்படுத்துவது மருத்துவம் பார்க்க மறுப்பது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இது எதுவும் தன்னெழுச்சியாக நடைபெற்றவை அல்ல சில சம்பவங்களில் சங்பரிவார கும்பல் நேரடியாக பங்கேற்றும் பிற சம்பவங்கள் அவர்களின் கருத்துக்களால் தாக்கம் பெற்றும் நடந்துள்ளன, இதற்கு யார் பொறுப்பு ஏற்பது ? ஆர்எஸ்எஸ் சதி கும்பலை கட்டுப்படுத்தாமல் சிறுபான்மை மதத் தலைவர்களை அழைத்து “சர்வமத’ கூட்டம் நடத்துவதன் மூலம் மட்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியுமா? மருத்துவமனைக்கு சென்ற இஸ்லாமியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லி சட்டவிரோதமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட்டுள்ள மனிதநேயமற்ற மூடன் யோகி ஆதித்யநாத்துக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு ? முஸ்லிம்களின் ஓட்டும் வேண்டும் சங்பரிவாரக் கும்பலின் கலவர பிரச்சாரத்தையும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று நீங்கள் நடந்து கொண்டால் யாருக்கு நீங்கள் முதல்வர், செயலாளர் ? விமானம் வழியாக வந்திருக்கிற 2 லட்சம் பேரை இன்னும் நீங்கள் முழுமையாக பரிசோதனை செய்யவில்லை, அவர்களில் எவ்வளவு பேருக்கு நோய் தொற்று உள்ளது என அறிவதற்கு வேகம் காட்டவில்லை, ஆனால் ஆயிரம் இஸ்லாமியர்களை பெரிய செய்தியாக்கி அவர்களையும் முழுமையாக பரிசோதிக்காமல் தினம் ஒரு எண்ணிக்கை அறிவித்து மக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கிறீர்களே அதன் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டாமா, மக்கள் தங்கள் சொந்த ஊர் காரனையே உறவுக்காரனையே அச்சத்தோடு கிராமத்திற்கு உள்ளே வரவிடாமல் தடுக்கின்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற சூழலில் ஒரு மதக் குழுவை குற்றம் சாட்டுகிறீர்களே நிர்வாகம் நடத்துவதற்கு நீங்கள் தகுதியானவர்கள்தானா அறிவுள்ளவர்கள்தானா யோசிக்க வேண்டாமா ?

 

பல நாடுகளில் லட்சக்கணக்கான பரிசோதனைகள் மேற் கொண்டிருக்கிற சூழலில் மொத்தமே 3,000 எண்ணிக்கை பரிசோதனையை மட்டும் மேற்கொண்டு மக்களை அச்சம் ஊட்டக் கூடாது எனச்சொல்லி கணக்கை குறைத்து காட்டுகின்ற நீங்கள் ஆயிரம் முஸ்லிம்களுக்கு மட்டும் அவசர அவசரமாக பரிசோதனை மேற்கொண்டதாக பொய் சொல்லி எண்ணிக்கை காட்டுகிறீர்களே இது மக்களை அச்சம் ஊட்டாதா, உங்கள் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாகவும் உங்கள் தவறுகளை திசை திருப்புகின்றதாகவும் அமையவில்லையா ? எனவே நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் மக்கள் மத்தியிலான அச்சத்தை பாகுபாட்டு நடவடிக்கைகளை களையவேண்டும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பதவி விலகி பேரிடர் கால நிர்வாகத்தை கையாள்கிற அக்கறையுள்ள அனைத்துக்கட்சி சக்தி களிடம் அதிகாரத்தை ஒப்படையுங்கள் அதுதான் மக்களின் உயிருக்கும் நாட்டின் அமைதிக்கும் நல்லது.

 

– பாலன்,

பொதுச்செயலாளர்,  தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

கொரானாவைவிட கொடூரமான வைரஸ் ஆர்எஸ்எஸ்- பிஜேபி, மோடி -ஷா சதி கும்பல்!

https://peoplesfront.in/2020/04/01/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0/  

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW