இந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….
அன்று போல் இன்றும் இந்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரால் தாய்மொழி வழிக் கல்வி மறுப்பும், இந்தி மொழித் திணிப்பும் எமது குழந்தைகளை வதைத்து வருகிறது.
5ஆம் வகுப்பில், எட்டாம் வகுப்பில், பத்தாம் வகுப்பில், 11, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வின் மூலம் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிக்கின்றன.
கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப்பட்டியல் எனும் பெயரால் கொண்டு செல்லப்பட்டு, இன்று காவிபயங்கரவாத அரசால் தேசிய கல்விக் கொள்கை வழியாக மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு சேர்க்கிறது. கல்வியின் மீதான மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு ஒற்றை அதிகாரத்தின் கீழ் நீட், நெக்ஸ்ட் தேர்வு எனக் கட்டுப்படுத்தப்படுகிறது.
தாய்மொழி வழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் பூர்வக் கல்வியை மாநில அரசுகளே நடைமுறைப்படுத்தும் வகையில் கல்வியின் மீதான இந்திய மைய அரசின் அதிகாரத்திற்கு எதிராகப் போராட வேண்டும்.
மொழிப்போர் ஈகியரே! உங்களது ஈகத்தின் பெயரால் சபதமேற்கிறோம்! வீரவணக்கம்!
காவி – கார்ப்பரேட் பாசிச அரசிற்கு எதிராக அணிதிரள்வோம்!
சாதி ஒழிந்த, மதச்சார்பற்ற, மக்கள் சனநாயகத் தமிழ்த்தேசக் குடியரசு படைப்போம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051