தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்!
நேற்று முன் தினம் திசம்பர் 29 அன்று திருச்சியில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் – தேசிய மக்கள்தொகை பதிவேடு – தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவது குறித்து பல்வேறு அமைப்புகள் திருச்சி ஜங்சன் அருகில் உள்ள அருண் ஓட்டல் அரங்கத்தில் கூடி ஆலோசித்தன. இதில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திவிக, தபெதிக, தமுமுக, மமக, எஸ்டிபிஐ, மக்கள் அதிகாரம், பி.எப்.ஐ., மஜக, வெல்பேர் பார்டி ஆஃப் இந்தியா, ஐ.யூ.எம்.எல்., அகில் இந்திய மஜ்லீஸ் கட்சி, சிபிஐ(எம்-எல்) விடுதலை, தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, SMI, LRCPO, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், மக்கள் மையம், தமிழ்த்தேச மக்கள் கட்சி, உழைக்கும் மக்கள் சேவை கட்சி ஆகிய அமைப்புகள் பங்குபெற்றன. வரும் சனவரி 6 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், “தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை நடத்தமாட்டோம்” என தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துவது என இவ்வாலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சியில் இருந்து சட்டமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சனவரி 3 ஆம் தேதி அன்று கோரிக்கை மனுவைக் கொடுப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் சனவரி 6 சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணைத்து ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு
9443079552 / 9585417086