குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ

15 Dec 2019

-முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கப்பாடியா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவானது, 2019 (CAB) நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றுள்ளது. இந்த மசோதா பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிற நிலையில் இது குறித்தான நிதானமான ஆய்வு அவசியமாகிறது.

1947 பிரிவினையின்போது பெரியளவில் வங்கதேச  அகதிகளாக அசாமில் குடியேறினர். அவர்களில் சிலர் இஸ்லாமிய பெரும்பான்மைவாதத்தின் நெருக்கடி/துன்புறுத்தல் காரணமாக  பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். ஆனாலும் பல ஏழை எளிய இஸ்லாமியர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் எனும் கனவில் இந்தியாவில் குடியேறினர்.

ஆக, மத காரணங்களுக்காக அல்லாமல் நல்ல வாழ்க்கை நிலையை எதிர்நோக்கி புலம்பெயர்ந்தவர்கள் “பொருளாதார அகதிகள்” எனப்படுவர். சரியாக சொல்வதென்றால் 1951 இல் ஐ.நா அகதிகள் மாநாட்டில் அகதிகளை இவ்வாறே வரையறை செய்துள்ளது. தற்போது உலகில் பெரியளவில் பொருளாதார அகதிகள் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி  மெக்சிகோ நாட்டு மக்கள் முறையான ஆவணமில்லாமல் குடியேறியுள்ளார்கள். இவர்கள் அனைவருமே, நல்ல வாழ்க்கை நிலைக்காகவே புலம் பெயர்ந்தார்கள். இவ்வாறு வந்தவர்கள் சுமார் நாற்பது ஆண்டுகாலம் அமெரிக்காவிலேயே  தங்கி விட்டனர். தாய் நாடான மெக்சிகோவில் தற்போது இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாமலும் வேர்களற்றும் போயினர்.

இவர்களை என்ன செய்வது? அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இவர்களை மீண்டும் மெக்சிகோவிற்கு அனுப்பவேண்டும் என்கிறார். ஆனால் இவ்வாறு கருத்துக் கூறுவது எளிது. செய்வது கடினம்.

இந்தியாவில் அசாம் ஒப்பந்ததத்தின்படி, 1971  மார்ச்க்கு முன்பாக வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் வந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் தற்போதையே குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி (CAB 2019) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளத்திலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்து, சீக்கியம், கிறிஸ்துவம் பார்சி, பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய ஆறு மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இவர்கள் 2014 ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்திருந்தால் போதுமானது என்கிறது. ஆனால், இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களை மேற்கூறிய பட்டியலில் சேர்க்காததே சர்ச்சையின் மையம்.

மத துன்புறுத்தல் காரணமாக இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வரவில்லை மாறாக மற்ற ஆறு மதத்தினர் மட்டுமே மத துன்புறுத்தலால் இந்தியாவிற்குள் அகதிகளாக வந்துள்ளனர் என இஸ்லாமியர்கள் மீதான பாரதிய ஜனதா கட்சி பாகுபாட்டை நியாயப்படுத்துகிறது. இது சின்ன சாக்கு போக்கு மட்டுமே. உண்மையான காரணமானது, இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு குடியிரிமை மறுக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.

பாகிஸ்தானில் அஹமதியர்களுகும், ஷியாக்களும்  உள்நாட்டிலேயே துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவிற்குள் வருகிறார்கள். பாகிஸ்தானில் அஹமதியர்கள், இஸ்லாமியர்கள் அல்ல என சட்டத் திருத்தம் செய்துள்ளது. அதேநேரம் கேரள உயர் நீதிமன்றமோ அஹ்மதியர்கள், இஸ்லாமியர்களே என தீர்ப்பளித்துள்ளது. அது எப்படியானாலும் பாகிஸ்தானில் அகமதியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

அசாமில் அகதிகளின் குடியேற்றத்திற்கு எதிராக பல அசாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போரட்டக்காரர்களுக்கு அகதிகள் இஸ்லாமியர்களா, இந்துக்களை  என்பது பொருட்டல்ல. மாறாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதையே எதிர்க்கிறார்கள். மற்றவர்கள் வேறு சில காரணங்களால் சட்டத்திருத்தத்தை (CAB) எதிர்க்கிறார்கள். தற்போது அசாமே பற்றி எரிகிறது. ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

உண்மை யாதெனில், பெரும்பாலான வங்காள இஸ்லாமியர்கள் பல தசாப்த காலமாக அசாமில் வாழ்ந்து வருகிறார்கள். சட்டப்பூர்வ வழிகளில் அவர்கள் இங்கே குடியேறவில்லை. பலர் அசாமிலேயே  பிறந்தும் உள்ளனர். தற்போது வங்காளத்தில் அவர்களுக்கு எந்த  வேர்களுமே இல்லை. இந்நிலையில் இவர்களை எங்கே அனுப்புவது? இவர்களை ஏற்கப்போவதில்லை என வங்காளதேச அரசாங்கம்  அறிவித்துள்ளது. இது சட்டச்சிக்கல் முட்டுமல்ல , மாறாக மனிதநேய சிக்கலாகும்.

மும்பையில்  “ஜோஹி ஹொபிட்ஸ்” சட்டவிரோதமாக  குடியேறி ஆக்கிரமித்துள்ளர்கள் என்ற மனு தொடர்பான விசாரணை வழக்கொன்று எங்களில் ஒருவர் (காட்ஜூ) நீதிபதியாக இருந்த உச்ச நீதிமன்ற அமர்விற்கு வந்ததை இங்கு நினைவு கூறுகிறேன். அவ்வழக்கில், இந்த அகதிகள் சட்டவிரோதமாக மும்பையில் குடியேறியுள்ளார்கள். எனவே இவர்களை தூக்கி எறியவேண்டும் என மூத்த நீதிபதியொருவர் கூச்சலிட்டார். ஆனால் நீதிபதி கட்ஜூவோ, நிதானமாக இவ்வாறு கூறுனார் “சகோதரரே! அவர்கள் எங்கு செல்வார்கள்?அனைவரையும் அரபிக் கடலில் அமிழ்த்தி விடலாமா? இது சட்டப் பிரச்சனை முட்டுமல்ல மாறாக மனிநேயம் தொடர்பானது”

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு என சில உரிமைகளைச் சட்டப்பிரிவு 19 இன் கீழ் வழங்கியுள்ளது.மேலும் சட்டபிரிவு-14 சமத்துவத்தையும் சட்டபிரிவு-21 வாழ்வதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறது. குடிமகன் அல்லாதவரும் மனிதரே என்ற வகையில் அவர்களுக்கும் இந்த உரிமை பொருந்தும்

தேசிய மனித உரிமை ஆணையம் Vs அருணாச்சல பிரதேசம் வழக்கில், சக்மா அகதிகள் குறித்த கேள்வி வாதத்திற்கு வந்தது. வங்காளத்திலிருந்து அகதிகளாக வந்தததால்  இவர்களிடம் உரிய ஆவணம் எதுவும் இல்லை. இந்நிலையில் சக்மா அகதிகள், இந்திய குடிமக்களாக இல்லாவிட்டாலும், அரசியல் சாசன சட்டப்பிரிவு-21  இன்படி வாழ்வதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெறுவதற்கு அடிப்படை உரிமை கொண்டவர்கள் என நீதிமன்றம் கூறியது.

இதன் அடிப்படையில் பார்த்தால் CAB என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் -14 மற்றும் 21 ‘ ஆகியவற்றிற்கு  புறம்பானதாகும்.

 

மூலக்கட்டுரை:

https://thewire.in/law/citizenship-amendment-bill-unconstitutional

ஆங்கிலம் வழி தமிழில்-அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW