ஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல! உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது

10 May 2019

கருவேப்பிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஆகாஷ் – திலகவதி இருவரும் 8ஆம் வகுப்பு முதற்கொண்டு காதலித்து வந்திருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். திலகவதி அக்கா ஏற்கனவே தற்கொலை செய்து இறந்திருக்கிறார். எப்பொழுதும் குடிபோதையில் இருக்கும் அக்காவின் கணவர் திலகவதியை பெண் கேட்டிருக்கிறார். திலகவதி மறுத்துவிட்டார்.
கொலை நடந்த அன்று திலகவதி ஆகாஷை அழைத்து சில்லறை மாற்றித்தர கோரியிருக்கிறார். ஆகாஷ் அதனை செய்திருக்கிறார். இதனை தூரத்தில் இருந்து போதையிலுள்ள அக்கா கணவர் பாத்திருக்கிறார். அதன் பிறகு கொலை நடந்திருக்கிறது.

தனக்கு கிடைக்காத நீ அவனிடம் (பறையனிடம்) போறியா? என்ற கோபத்தில் ஏற்கனவே இருந்ததாக சொல்லப்படுகிறது. திலகவதியின் தாய் மாமன் ஒருவர் இருக்கிறார். அவர் மீதும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த கொலையை ஒடுக்கப்பட்ட சமூக அப்பாவி இளைஞனான பயம் குணம் கொண்ட காதலனான ஆகாஷ் மீது போடப்பட்டுள்ளது. திட்டமிட்டு வன்முறைக்கு வழிவகுக்கப்பபட்டுள்ளது.

திலகவதி பெற்றோர்களும் உறவினர்களுமே “ஆகாஷ் செய்திருக்க வாய்ப்பில்லை“ என்றும் அக்கா கணவர் மீது சந்தேகம் இருக்கிறது என்றே கூறியதாக நேரில் விசாரித்த தோழர்கள் கூறுகிறார்கள்.

தற்போது ஆகாஷ் அப்பா எஸ்பி யிடம் “தன் மகன் இந்த கொலையை செய்யவில்லை. உண்மைக் குற்றவாளியை கைதுசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்து மனு அறித்திருக்கிறார்.

கொலை நடந்தபோது ஆகாஷ் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்திருக்கிறார். இறந்த தகவலை அறிந்து நண்பன் மூலம் போன் செய்திருக்கிறார்கள். காவல்துறை உடனடியாக கிராமத்திற்குள் இருந்த ஆகாஷை கைதுசெய்திருக்கிறது. ஆனால் விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் கைதுசெய்ததாக கூறவேண்டிய அவசியம் என்ன? எதற்காக?

சென்னை சுவாதி கொலை வழக்கில் புலனாய்வு பெயரில் உண்மையை பேச விடாமல் கழுத்தை அறுத்த இதே காவல்துறை, நிர்மலாதேவியை மீடியாவின் பேசவிடாமல் தடுத்த இதே காவல்துறை,

சேலம் ராஜலட்சுமியை கொன்ற தினேஷ் சின் வாக்குமூலத்தை வீடியோவாக வெளியிடாத தமிழக காவல்துறை வேகவேகமாக ஆகாசின் வாக்குமூலத்தை வீடியோவை வெளியிடுவதன் நோக்கம் என்ன?

உண்மை என்னவென்று விசாரிப்பதற்கு முன்பே பாமக ராமதாசு அரசியலாக்குவது ஏன்? வன்னியர் பறையர் சமூக மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கா? ஒரு கோடிரூபாய் இழப்பீட்டை கேட்பது எதற்காக?

தமிழக அரசே

  • தமிழகம் முழுக்க சாதி கலவரம் செய்துவரும் ‘நாடக காதல்‘ என பொய்யான செய்தியை பரப்பி தலித் மக்களை குற்றவாளியாக்கும் ராமதாசை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்.
  • கருவேப்பிலக்குறிச்சியில் வாழும் தலித் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய். தன் மகன் குற்றவாளியல்ல என மனு அளித்திருக்கும் ஆகாஷ் அப்பாவிற்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்.
  • திலகவதியின் குடும்பத்திற்கும் அங்கு வாழும் அப்பாவி வன்னியர் மக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கிடு.
  • உண்மைக் குற்றவாளி யார்? என விசாரிக்காமலேயே நாடகக் காதல் என பொய் பிரச்சாரம் செய்து பதற்றத்தை உண்டாக்கி கலவரத்திற்கு திட்டமிடும் பாமக ராமதாசை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்.

பாமக இராமதாசு கும்பலை வன்னியர் மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அவர்களின் சூழ்ச்சியை வெளிக்கொணர்வோம்.

ரமணி
சாதி ஒழிப்பு முன்னணி

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW