வங்கியின் வாராக் கடனும் ரிசர்வ் வங்கி மீதான மோடி அரசின் தாக்குதலும..

08 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 4

 1. இந்திய  வங்கி முன் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல் வாராக் கடன் பிரச்சனை ஆகும்.மார்ச் 2018  ஆம் ஆண்டுவரை வங்கிகளின் வாராக் கடன் தொகையானது சுமார் 10,35,528 கோடியாகும். கடந்த மார்ச் 2015 ஆம் ஆண்டில் 3,23,464 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன் தொகையானது,கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 6.2 l லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரு முதலாளிகள் வங்கிக் கடன்களை முறையாக செலுத்தாமல் வங்கிகளின் மூலதன இருப்பும் வங்கிச் செயல்பாடும் நலிவடைந்துவருகின்றன. இது பன்னாட்டு நிதியகத்தின் பேசல் விதிகளின்படி வங்கிகளின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு வரையறையை இந்திய வங்கிகளில் கடைபிடிக்க இயலாத கையறு நிலைக்கு தள்ளியுள்ளது. இதை சரிக்கட்டும் விதமாக வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குகிற “இந்திர தனுஷ்”  திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டது.

  இந்நிலையில்  வங்கிகளின் நிதிச்சுமைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை(PCA) மேற்கொண்டது. அதே நேரத்தில் அதன் தன்னாட்சி அதிகாரமும் அரசியல் எல்லைக்கு உட்பட்டே இருந்தநிலையில் மோடி அமித்ஷாவின் காவி-கார்ப்பரேட் கும்பலாட்சி ரிசர்வ் வங்கி ஆளுநரை நசுக்கத் தொடங்கியது.

  • கடந்த 2018 பிப்ரவரி மாதம், வாராக் கடன் தொடர்பாக முக்கிய சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிருந்தது. அதில் ரூ 2000 கோடிக்கு அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்களின் கடன் நிலுவையானது 180 நாட்களைக் கடந்து தொடர்ந்தால், அந்நிறுவனங்களைத் திவாலான நிறுவனமாக அறிவித்து திவால்சட்ட  நடைமுறையின்படி நிறுவனங்களின் சொத்தை ஏலம் விடுவதற்கானப் பணியைத்  தொடங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதன்படி சுமார் 3.8 லட்சம் கோடி மதிப்பிலான 70 வாராக் கடன் நிலுவை பட்டியில் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இந்த 3.8 லட்சம் கோடியில் நான்கில் மூன்று பங்கு பெரும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பெற்றதாகும். போலவே இம்முடிவு அமலாக்கப்பட்டால் குஜாரத் மாநிலத்திற்கு சொந்தமான  நிறுவனமான Gujarat State Petroleum Corporation திவாலானதாக அறிவிக்கப்படும். ஏனெனில் மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் இந்நிறுவனத்தின் வாராக் கடன் மதிப்பானது 12,519 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆக, ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பெரும் தனியார் நிறுவன முதலாளிகளைப் போலவே மோடி – அமித்ஷா கும்பலையும் நெருக்கடியில் தள்ளியது.
  • ரிசர்வ் வங்கியின் இம்முடிவை எதிர்த்து (குறிப்பாக 180 நாட்கள் குறைவான கால அவகாசம் என்பது நிறுவனங்களின் வாதம்) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. மோடி அரசும் இதில் குற்றவாளி ஆக வாய்ப்பிருப்பதால், ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையை எதிர்த்து தனது சூறையாடும் முதலாளிகளுடன் சேர்ந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்திய அரசியல் வரலாற்றில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் அரசு என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது தங்கள் மீதான வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுககளில் பிரிவு 7 இன்  மூலமாக அரசு தலையீடு செய்ய பரிசீலிக்க வேண்டுமென  மின்துறை நிறுவனங்கள் கோரியிருந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடைபிடிக்கிற நெறிமுறைகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதாகும். இறுதியில் கார்ப்பரேட்களுக்கு வெற்றி கிட்டியது.
  • பலவீனமான மூலதன இருப்பில் திண்டாடுகிற வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்குவது, சிறுகுறு நிறுவனங்களுக்கு மேலதிகக் கடன் வழங்குவது, பணப்புழக்கம் ஆகியவைத் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் தடையாக இருப்பதால் தன்னிச்சையான வகையில் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கைகளை அமலாக்குகிற வகையில் சட்டபிரிவு-7 இன் மூலமாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மோடி அமித்ஷா கும்பலின் நெருக்குதல் தாங்காமல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகினார்.
  • மோடியின் செல்லாக் காசு நடவடிக்கையின்போது மத்திய அரசு மேற்கொண்ட குளறுபடியான, ஒன்றன்பின் ஒன்றான பல்வேறு அறிவிப்புகளை “சிறப்பாக” ஒருங்கிணைத்து வெளியிட்டவரும் முன்னாள் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சக்திகாந்த தாசை ஆளுநராக  நியமித்தது மத்திய அரசு.
  • கடந்த 2015 ஆம் ஆண்டில் வங்கிக்கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய கார்ப்பரேட்கள் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்து, அதன்  மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற வரைவுக்குழுவிற்கு அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடிதம் எழுதினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிற்கு ராஜன் எழுதிய  முக்கிய கடித விவகாரத்தை (தி வயர் பத்திரிக்கைக்கு) ரிசர்வ் வங்கி உறுதிசெய்துள்ளது. ராஜன் பதவி விலகுவதற்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற வரைவுக் குழுவிடம் வாராக் கடன் தொடர்பாக 17 பக்க விளக்கம் அளித்தார். அதில் 2015 இல் கடன் மோசடியாளர்கள் பட்டியல் பற்றி தான் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இதுநாள் வரையிலும் இந்த பட்டியலை அரசு வெளியிடவும் இல்லை, நடவடிக்கை குறித்த விளக்கமும் இல்லை. மாறாக விஜய் மல்லையாவைத் தொடந்து நீரவ் மோடி,மெகுல் சோக்சி என கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் நடைபெற்றுவருகிறது.
  • மக்கள் வரிப்பணத்தை வங்கியின் மூலமாக சூறையாடும் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு பணிந்துபோகச் செய்வதற்கு, தொடர்பே இல்லாத ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியையும், கார்ப்பரேட் அதிபர் சதீஸ் காசினாத்தையும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களாக்கி, ரிசர்வ் வங்கியின் முக்கிய கூட்டங்களிலும் கொள்கை முடிவுகளிலும் குழப்பத்தையும் நெருக்கடியையும்  ஏற்படுத்தி வருகிறது மோடி அரசு.

இந்திய  வங்கி முன் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல் வாராக் கடன் பிரச்சனை ஆகும்.மார்ச் 2018  ஆம் ஆண்டுவரை வங்கிகளின் வாராக் கடன் தொகையானது சுமார் 10,35,528 கோடியாகும். கடந்த மார்ச் 2015 ஆம் ஆண்டில் 3,23,464 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன் தொகையானது,கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 6.2 l லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரு முதலாளிகள் வங்கிக் கடன்களை முறையாக செலுத்தாமல் வங்கிகளின் மூலதன இருப்பும் வங்கிச் செயல்பாடும் நலிவடைந்துவருகின்றன. இது பன்னாட்டு நிதியகத்தின் பேசல் விதிகளின்படி வங்கிகளின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு வரையறையை இந்திய வங்கிகளில் கடைபிடிக்க இயலாத கையறு நிலைக்கு தள்ளியுள்ளது. இதை சரிக்கட்டும் விதமாக வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குகிற “இந்திர தனுஷ்”  திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில்  வங்கிகளின் நிதிச்சுமைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை(PCA) மேற்கொண்டது. அதே நேரத்தில் அதன் தன்னாட்சி அதிகாரமும் அரசியல் எல்லைக்கு உட்பட்டே இருந்தநிலையில் மோடி அமித்ஷாவின் காவி-கார்ப்பரேட் கும்பலாட்சி ரிசர்வ் வங்கி ஆளுநரை நசுக்கத் தொடங்கியது.

 • கடந்த 2018 பிப்ரவரி மாதம், வாராக் கடன் தொடர்பாக முக்கிய சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிருந்தது. அதில் ரூ 2000 கோடிக்கு அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்களின் கடன் நிலுவையானது 180 நாட்களைக் கடந்து தொடர்ந்தால், அந்நிறுவனங்களைத் திவாலான நிறுவனமாக அறிவித்து திவால்சட்ட  நடைமுறையின்படி நிறுவனங்களின் சொத்தை ஏலம் விடுவதற்கானப் பணியைத்  தொடங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதன்படி சுமார் 3.8 லட்சம் கோடி மதிப்பிலான 70 வாராக் கடன் நிலுவை பட்டியில் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இந்த 3.8 லட்சம் கோடியில் நான்கில் மூன்று பங்கு பெரும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பெற்றதாகும். போலவே இம்முடிவு அமலாக்கப்பட்டால் குஜாரத் மாநிலத்திற்கு சொந்தமான  நிறுவனமான Gujarat State Petroleum Corporation திவாலானதாக அறிவிக்கப்படும். ஏனெனில் மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் இந்நிறுவனத்தின் வாராக் கடன் மதிப்பானது 12,519 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆக, ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பெரும் தனியார் நிறுவன முதலாளிகளைப் போலவே மோடி – அமித்ஷா கும்பலையும் நெருக்கடியில் தள்ளியது.
 • ரிசர்வ் வங்கியின் இம்முடிவை எதிர்த்து (குறிப்பாக 180 நாட்கள் குறைவான கால அவகாசம் என்பது நிறுவனங்களின் வாதம்) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. மோடி அரசும் இதில் குற்றவாளி ஆக வாய்ப்பிருப்பதால், ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையை எதிர்த்து தனது சூறையாடும் முதலாளிகளுடன் சேர்ந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்திய அரசியல் வரலாற்றில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் அரசு என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது தங்கள் மீதான வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுககளில் பிரிவு 7 இன்  மூலமாக அரசு தலையீடு செய்ய பரிசீலிக்க வேண்டுமென  மின்துறை நிறுவனங்கள் கோரியிருந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடைபிடிக்கிற நெறிமுறைகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதாகும். இறுதியில் கார்ப்பரேட்களுக்கு வெற்றி கிட்டியது.
 • பலவீனமான மூலதன இருப்பில் திண்டாடுகிற வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்குவது, சிறுகுறு நிறுவனங்களுக்கு மேலதிகக் கடன் வழங்குவது, பணப்புழக்கம் ஆகியவைத் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் தடையாக இருப்பதால் தன்னிச்சையான வகையில் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கைகளை அமலாக்குகிற வகையில் சட்டபிரிவு-7 இன் மூலமாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மோடி அமித்ஷா கும்பலின் நெருக்குதல் தாங்காமல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகினார்.
 • மோடியின் செல்லாக் காசு நடவடிக்கையின்போது மத்திய அரசு மேற்கொண்ட குளறுபடியான, ஒன்றன்பின் ஒன்றான பல்வேறு அறிவிப்புகளை “சிறப்பாக” ஒருங்கிணைத்து வெளியிட்டவரும் முன்னாள் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சக்திகாந்த தாசை ஆளுநராக  நியமித்தது மத்திய அரசு.
 • கடந்த 2015 ஆம் ஆண்டில் வங்கிக்கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய கார்ப்பரேட்கள் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்து, அதன்  மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற வரைவுக்குழுவிற்கு அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடிதம் எழுதினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிற்கு ராஜன் எழுதிய  முக்கிய கடித விவகாரத்தை (தி வயர் பத்திரிக்கைக்கு) ரிசர்வ் வங்கி உறுதிசெய்துள்ளது. ராஜன் பதவி விலகுவதற்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற வரைவுக் குழுவிடம் வாராக் கடன் தொடர்பாக 17 பக்க விளக்கம் அளித்தார். அதில் 2015 இல் கடன் மோசடியாளர்கள் பட்டியல் பற்றி தான் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இதுநாள் வரையிலும் இந்த பட்டியலை அரசு வெளியிடவும் இல்லை, நடவடிக்கை குறித்த விளக்கமும் இல்லை. மாறாக விஜய் மல்லையாவைத் தொடந்து நீரவ் மோடி,மெகுல் சோக்சி என கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் நடைபெற்றுவருகிறது.
 • மக்கள் வரிப்பணத்தை வங்கியின் மூலமாக சூறையாடும் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு பணிந்துபோகச் செய்வதற்கு, தொடர்பே இல்லாத ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியையும், கார்ப்பரேட் அதிபர் சதீஸ் காசினாத்தையும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களாக்கி, ரிசர்வ் வங்கியின் முக்கிய கூட்டங்களிலும் கொள்கை முடிவுகளிலும் குழப்பத்தையும் நெருக்கடியையும்  ஏற்படுத்தி வருகிறது மோடி அரசு.
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW