தொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன ? – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி

27 Feb 2019

சமீப காலமாக, குறைந்தபட்ச ஊதியம் என்பது பொதுவெளியில் ஒரு கருத்தாக  உருவெடுத்துள்ளது. மார்க்சிய பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், ஊதியம் என்பது தொழிலாளியின்  உழைப்புச் சக்தியின் மதிப்பே. எனவே, ஊதியமானது தொழிலாளியின் அதே உழைப்புச்  சக்தியை மறுஉற்பத்தி  செய்யும் அளவிற்கு  இருக்க வேண்டும், அதாவது, தொழிலாளியின் அடிப்படையான  வாழ்க்கை செலவினங்கள், உணவு மற்றும் பல உட்பட …அவற்றிலிருந்து உதயமாகும் சில அடிப்படைக் கோட்பாடுகள் சில:

 

  1. ஒரு உரிமையாளர்  லாபமடைந்தாலும் அல்லது நட்டமடைந்தாலும், மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணத்தை  போலவே, அவர் லாபம் ஈட்டினாலும்  அல்லது நட்டம் அடைந்தாலும், எதுவாக இருந்தாலும், தொழிலாளர்களின் உழைப்புச்சக்திக்கு  ஊதியம் அளிக்க வேண்டும் .

 

  1. ஊதியமானது, எந்த சமூகத்திலும்  அன்றாட வாழ்க்கை செலவினங்களில்  மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, உறைவிடம், மருந்து விலைகள் உயர்வதை போலவே ஊதியமும் உயர்த்தப்படவேண்டும்.

 

  1. ஊதியங்கள் தொழிலாளர்கள் உழைப்புச்சக்தியை மறுஉற்பத்தி  செய்ய

வேண்டும் .  எனவே, அது  குடும்பம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான

வாழ்நிலைகளின் செலவை உறுதி செய்வதுமாய் இருக்கவேண்டும் .

 

தொழிலாளிக்கு அவசியமானது என்ன,  தினசரி தனது உழைப்புச்சக்தியை மீண்டும் உருவாக்குவது என்பது நீடித்த நிலையான ஒன்றல்ல, ஏனெனில் தொழிலாளி ஒரு சமூக விலங்கு. சமூகம் முன்னேறும் பொழுது, தொழிலாளியின்  அவசிய தேவைகளும்  மேலும் அதிகரிக்கிறது . உதாரணமாக  1980 களில், அலைபேசி என்பது அவசியமானதல்ல, ஆனால் இன்று அவசியமானது .

 

சந்தேகத்திற்கு இடமில்லாமல்  முதலாளித்துவத்தில், மூலதனத்தின் உரிமையாளரே அறிவையும் அதனூடாக விளைந்த தொழில்நுட்பத்தின் முழு நன்மையையும் தனக்கே சொந்தமாக்கிக்கொள்ள முயற்ச்சிப்பர். இருப்பினும், அந்த தொழில்நுட்பத்தினால்  இலாபம் ஈட்டுவதற்கு , அவர் அந்த தொழில்நுட்பத்தை சமூகத்திற்கு  பயனுள்ளதாக்க வேண்டும். இதுதான் தொழிலாளர்களை இந்த தொழில்நுட்பங்களை சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் தொழிலாளர்கள்  ஒன்றுபடவும் உதவுகிறது.  நிலவுகிற  முதலாளித்துவ கட்டமைப்பில் நிலையான போராட்டங்கள் நடந்துகொன்டே இருக்கின்றன. தொழிலாளி ஊதியத்தை  அதிகரிக்க முயற்சிக்கும் அதே வேளையில், ஊதியங்களைக் குறைப்பதற்காக முதலாளிகள்  முயற்சிக்கின்றனர். ஆனால், இந்நிலையில் முதலாளிகளுக்கு சாதகமாக வேலையின்மை உதவுகிறது. வேலையின்மை பிரச்சினை நீடிக்கும்வரை ஊதியங்களை குறைக்கும் முயற்சி அல்லது அழுத்தம் கொடுத்துக்கொன்டே இருக்கப்படும். ஒரு தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட ஊதியத்தில் வேலை செய்யத் தயாராக இல்லை என்றால், வேலையற்றவர்களுள் ஒருவரே அவருக்கு பதிலாக பயன்படுத்தப்படலாம்.

 

அதனால்தான், ஊதியத்திற்கான போக்கு கட்டுப்பாடுக்குள்  இல்லாவிட்டால் தொடர்ச்சியாக வீழ்ச்சியுறும். ஆனபோதிலும் , முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக  நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிற இந்த தொடர் வீழ்ச்சி பேரழிவைத் தரும். எனவேதான், தொழிலாளர் சந்தையை முறைப்படுத்த, குறைந்தபட்ச ஊதியம் என்பது  ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

குறைந்தபட்ச ஊதியத்தின் வரலாறு:

 

ஊதியத்தை முறைப்படுத்தும்  முதல் சட்டமானது, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணியக்கவில்லை மாறாக  அதிகபட்ச ஊதியத்தை நிர்ணியத்தது.

1349 ஆம் ஆண்டில் மூன்றாம் கிங் எட்வர்ட் ,தொழிலாளிகளுக்கு ஒரு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தார், அதன்மூலம்   தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த அதிகபட்ச ஊதியத்தை தரவேண்டும்  அதனுடன் நிர்ணயித்த ஊதியத்தை விட அதிகமாக தருபவர்களுக்கு   தண்டனை  மற்றும் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். 1348 ஆம் ஆண்டில் மிகக்கொடிய பிளேகு நோய் , இங்கிலாந்தின் மக்கள் தொகையை அழித்தது. அதனால், தொழிலாளர்கள் அதிகபட்சம் ஊதியம் கேட்கும் ஒரு நிலையில் இருந்தனர். இந்த பின்னணியில் தான் அந்த சட்டம் இயற்றப்பட்டது. 1890 களின் இறுதியில்  நியூசிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ஊதியங்களை முறைப்படுத்த  சட்டங்கள் இயற்றப்பட்டன. 1909 ஆம் ஆண்டில், குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்த  முதல் சட்டம் ஐக்கிய பேரரசு ( UK ) இல் இயற்றப்பட்டது ( இது 4 வர்த்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும் ). 1928 ஆம் ஆண்டு , சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டு எண்: 026 இல் முன்வைத்ததை

ஒப்புக்கொள்ளும் அணைத்து  உறுப்பினர்களும்  குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்த  ஒரு பொறியமைவு அமைக்கும்  சட்டத்தை இயற்ற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 1955 இல் இந்தியா இதை ஒப்புக்கொண்டது. ஜான் ஹென்ரி  விட்லே தலைமையில்  தொழிலாளர்களுக்கான அரசு  ஆணையக்குழு , இந்தியாவில் தொழிலாளர்களின்  நிலைமைகளை ஆராய்ந்து , மே 1929 இல் சில தீர்வுகளை பரிந்துரைத்தது. இவை அனைத்தும் ,1928 ஆம் ஆண்டு மற்றும் 1929 ஆம் தொடக்கங்களில்  கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான தொழிலாளர்கள் போராட்டங்களின் நேரடி பதிலாக  இருந்தது. இது உலகெங்கிலும்  “பெரும் மந்தநிலை” நிலவியப்போதும் மற்றும்  பெரும் தொழிலாளர்களின் இயக்கங்களின் காலத்திலும் நடந்தது. இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு ஒரு பொறியமைவு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது , இதுவே இங்கு முதல் முறையாகவும் இருந்திருக்க கூடும்.

 

1937 ல், தொழிலாளர் இயக்கத்தில் ஒரு பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. 1937 உடன் ஒப்பிடுகையில் தொழிற்சங்க உறுப்பினர்களின்  எண்ணிக்கை   1938 இல் 50% அதிகரித்தது. இந்த காலகட்டங்களில் பல்வேறு மிகப்பெரும் வேலைநிறுத்த போராட்டங்கள் நடைபெற்றன , வங்கத்தில் சணல் ஆலைத்  தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம், அசாமில் டிக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின்   தொழிலாளர்கள்   வேலைநிறுத்தம் மற்றும் மும்பை, அஹமதாபாத், அம்ரித்ஸர் மற்றும் மெட்ராஸ் ஆகியவற்றில் பல ஜவுளி ஆலைகளின் தொழிலாளர்கள்  வேலைநிறுத்தங்கள் போன்றவை அதில் அடக்கம். அதே நேரத்தில் , 1939 ஆம் ஆண்டில் செங்கொடி  தொழிற்சங்கம் தலைமையில் அகவிலை  மற்றும் பணவீக்கம் காரணமாக 40% சம்பள உயர்வுக் கோரி  நடத்திய பிரபலமான ஜவுளி ஆலைகளின்  வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருந்தது .

 

.அப்போது  நியமிக்கப்பட்ட சமாதான குழுவின் பெரும்பாண்மையானோர்  10% சம்பள உயர்வை மட்டுமே  ஒப்புக்கொண்டனர் (நியாய விலை கடைகளின் மூலம் மற்றொரு 3% நிவாரணத்தை வழங்க கணக்கிடப்பட்டது ). இது  அடுத்த  6 மாதங்களுக்கு ஒரு பெரும் வேலைநிறுத்தத்திற்கான வழியை வகுத்தது. இந்தியாவில், 2ஆம் உலக போரின்போது , அரசாங்கம் ஒரு

தொழிலாளர் குழுவை  நியமித்து அவ்வப்போது மாநாடுகள் நடத்த ஆரம்பித்தன. அவையே, இந்திய தொழிலாளர் மாநாடு என அறியப்படுகிறது.  ஐ.எல்.சி.யின்(ILC)  5 வது அமர்வுகளில் 1943 ஆம் ஆண்டில்,  ஊதியங்கள், வீட்டுவசதி, சமூக நிலைமைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர் நிலைமைகளை ஆராய தொழிலாளர் ஊதியக் குழு ஒன்று   நியமிக்கப்பட்டது. SLC மற்றும் ஐ.எல்.சி.யின் 6 வது மற்றும் 7 வது அமர்வுகள், 1944 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்ச ஊதியங்களை   சட்டபூர்வமாக உறுதிப்படுத்துத்துவதை பரிந்துரைத்து சில தொழிற்சாலைகளில் இதற்கான ஒரு பொறியமைவை நிறுவியது. இதன் விளைவாக, 1946 இல் மத்திய சட்டமியற்றும் குழு ஒரு சட்டவரைவை அறிமுகப்படுத்தியது , இது இறுதியாக 1948 ல் குறைந்தபட்ச ஊதிய சட்டமாக  இயற்றப்பட்டது.

 

இந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு மத்திய ஆலோசனைக் குழுவை நியமித்தது, அது (CFW) நியாயமான ஊதியங்கள் குழு என  ஒரு குழுவை உருவாக்கியது.இந்த (CFW) நியாயமான ஊதியங்கள் குழு   என்பது மூன்று தர ஊதியங்கள் இருப்பதாக அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. குறைந்தபட்ச ஊதியம், நியாயமான ஊதியம் மற்றும் வாழ்க்கை ஊதியம். இந்த குழு, ஊதிய மதிப்பீட்டில் கருத்துக்கள் பரவலாக வரையறுக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டில் உள்ளது

 

 

 

 

1950 ல், இந்தியாவின் அரசியலமைப்பு, பாராளுமன்றத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் 43-வது பிரிவின்படி அனைத்து தொழிலாளர்கள்களின் வாழ்க்கை ஊதியத்தை சட்டபூர்வமாகவோ  அல்லது பிற வழிமுறைகளால் அரசு பாதுகாக்க முயலும். இதுவே உயர்ந்த நிலை ஊதியமாக அறியப்படுகிறது .

 

1957 இல், ஐ.எல்.சி.யின் 15 வது அமர்வு, குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளை ஏற்றுக்கொண்டது.

அவை பின்வருமாறு :

 

  1. குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிடுவதில், ஒரு தொழிலாளருக்கு  மூன்று நுகர்வோர் அலகுகளைக் கொண்டதாக கணக்கிடப்படுகிறது.

குடும்பத்தில பெண்களின் மற்றும்  குழந்தைகள் வருமானம் கணக்கிடப்படுவது இல்லை.

 

  1. குறைந்தபட்ச உணவுத் தேவைகள் 2700 கலோரிகளை எடுத்துக் கொள்வதில் நிகர அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும், (டாக்டர்.அகிராட் பரிந்துரைத்தபடி மிதமான செயல்பாட்டின் சராசரி இந்திய பருவமடைந்தவர்களுக்கு).

 

  • ஆடைத் தேவைகள் ஆண்டுக்கு 18  YARD என்ற தனிநபர் நுகர்வு அடிப்படையில் ஆடைத் தேவைகள் மதிப்பிடப்பட வேண்டும், இது  நான்கு நபர்களை கொண்ட ஒரு  சராசரி தொழிலாளியின் குடும்பத்திற்கு  72 YARD  ஆகும்.

 

  1. குடியிருப்பு  சம்பந்தமாக, அரசாங்கத்தின் தொழில்துறை வீட்டு வசதி  திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச    வாடகையை , குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

 

  1. எரிபொருள், மின்சாரம்  மற்றும் இதர பொருட்களின் செலவுகளின் மொத்தம்,  குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகிதம் இருக்க வேண்டும்.

 

மேலும் , குறைந்தபட்ச ஊதியமானது,  மேலே பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு குறைவாக  இருக்கும் பட்சத்தில், விதிமுறைகளை பின்பற்றாததிற்கு , அந்த சூழ்நிலைகளை நியாயப்படுத்த சம்பந்தப்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரிகளே   பொறுப்பு என தீர்மானிக்கப்பட்டது.

 

1991 வரை, உச்ச நீதிமன்றம், ஸ்டாண்டர்ட் வாக்யூம் ரெஃப்டிங் கம்பெனி (Standard Vacuum Refining Company). வழக்கில் குறைந்தபட்ச ஊதியத்தை மதிப்பிடுவதற்காக இந்த விதிகளை பின்பற்றியது.

 

1991 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், ராப்டாகோஸ் பிரட் தொழிலாளர்களின் வழக்கில்  மேலே குறிப்பிட்ட விதிமுறைகளும் போதாதென்று,மேலும் ஒரு கொள்கையை  சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிட்டனர், அதாவது:

 

  1. குழந்தைகளின் கல்வி, மருத்துவ தேவை,குறைந்தபட்ச பொழுதுபோக்குகளான  பண்டிகை / விழாக்காலங்கள் மற்றும் வயதானவர்களுக்கான  திருமணங்கள்  போன்றவற்றிற்கு   குறைந்தபட்ச ஊதியத்தில் 25% கூடுதலாக இருக்க வேண்டும்

 

7 வது ஊதிய குழு, அதிகமாகவோ  அல்லது குறைவாகவோ, இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் தொடங்கியது. இது 15 வது ஐ.எல்.சி. யால் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உணவு மற்றும் ஆடைகளை கணக்கிடுகிறது. எனினும், இங்கே அவர்கள்  விலகியுள்ளனர் . எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றிற்கான மொத்த உணவு மற்றும் உடைகளுக்கு  25% மட்டுமே அவர்கள் வழங்கியுள்ளனர், அதேசமயம் 15 வது ஐ.எல்.சி. கணக்குப்படி   25% என்பதை உணவு, உடை மற்றும் வீடு ஆகியவற்றிர்கே வழங்கியிருக்க  வேண்டும். மேலும், குழந்தைகளின்  கல்வி, மருத்துவ செலவுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு  அவர்கள் புதிய மொத்தத்தில் 33% (அல்லது 25% ஒட்டுமொத்தத்தில்)  கொடுத்திருக்க வேண்டும். இருப்பினும், கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் தனித்தனி படிகளாக வேண்டும்  எனக் கோரியதன் கீழ் பண்டிகை மற்றும் இதர செலவினங்களுக்கு  பெரும் மொத்தத்தில் 15% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. பின்னர், அது திறனுக்காக  25% கூடுதல் தொகையை வழங்கியுள்ளது (படிநிலை III மற்றும் படிநிலை   IV ஆகியவை இணைக்கப்பட வேண்டும்). இறுதியாக அது வீடுகளுக்கு 3% (மாதத்திற்கு ரூபா 500) வைத்திருக்கின்றது! ஆனாலும், அது ஒரு எண்ணிக்கையாக  குறைந்தபட்ச படிநிலையில் புதியதாக நுழையும் ஒருவருக்கு 2016 ஜனவரியில்  ரூ.18000 ஆகவும் மற்றும் 2016 ஜூலையில் ரூ .18500  ஆகவும் அடைகிறது.

 

உணவு மற்றும் உடைகளுக்கான 7 வது ஊதிய  குழுவினரால் தயாரிக்கப்பட்ட அதே புள்ளிவிவரங்களை நாம்  பின்பற்றினால், குறைந்தது ஒரு  வீட்டுக்கு மாதத்திற்கு 4000 ரூபாயும் பின்னர் 15 வது ஐ.எல்.சி.யின் கண்காணிப்பில் விதிமுறையை  தொடர்ந்து பின்பற்றினால்  பின்வரும் விளக்கப்படம் கிடைக்கும்..

 

1 ஜனவரி 2016 இல் 3 நுகர்வோர் அலகுகளுக்கான 7 வது ஊதியக் குழுவால் 2700 கலோரிகள் (அனைத்து இந்திய விலைகளின் படி  )மற்றும் உடைகளுக்கு  மாதத்திற்கு 5.5 மீட்டர்)  நிர்ணயிக்கப்பட்ட தொகை.

(அறிக்கையின் 65 பக்கத்தைப் பார்க்கவும்)

                    9218.00
2. வீட்டு வாடகை 4000.00
3 மொத்தம் 1+2 13218.00
4 மின்சாரம், எரிபொருள் மற்றும் குடிநீர் 3304.50
5. மொத்தம் 3 + 4 (0.8 ஆல் வகுக்கப்பட்ட 3) 16522.50
6. கல்வி, மருத்துவ தேவை, விழாக்காலங்கள் மற்றும் வயதானவர்களுக்கான  திருமணங்கள் போன்றவை (ராப்டகோஸ்  தீர்ப்பின் படி) 5507.50
6  மொத்தம் (0.75 ஆல் வகுக்கப்பட்ட 5) 22030.00

ஒரு தொழிலாளி மற்றும் அவருடைய குடும்பத்திற்கான வீட்டுவசதி மாதத்திற்கு ரூ. 4000 திற்குள்  நாட்டில் எங்கும் கிடைக்காததால் நாம் இதில் மன்னிக்கப்படலாம்.  மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. ஜனவரி  2016 முதல் செப்டம்பர் 2017 வரை தொழில்துறை தொழிலாளர்கள் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 269 லிருந்து 285 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் இப்பொழுது ரூ.23340 ஆக திருத்தப்பட வேண்டும்.

 

1970 களின் பிற்பகுதி மற்றும் 1980 களில் இருந்து, குறிப்பாக 1991 ல் “புதிய பொருளாதார கொள்கையை” ஏற்றுக்கொண்ட   பின்னர், ஒரு எதிர் போக்கை காணமுடிகிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் மற்றும் “சப்ளைஸ்-லைன்” பொருளாதாரம் ஆகியவற்றை ஆதரிக்கும் ஆட்சிகளின்  மூலம்  ஊதியங்களை குறைத்து அதனால்  முதலாளிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் தெளிவான போக்கு உள்ளது. பல்வேறு துறையினரின் பல்வேறு அறிக்கைகளின்  அடிப்படையில்  பல்வேறு அரசாங்ககள்  மூலம் பல்வேறு தொழிற்சாலைகளில்  குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் முறை மிக  மோசமான ஊழலாக உள்ளது.

அவர்கள் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றவில்லை. பல சந்தர்ப்பங்களில், “சிறப்புப்  படி ” அல்லது ” படி-DA ” போன்றவை  குறைவானதாக  நிர்ணயிக்கப்படுவதால்,  விலையேற்றத்தின்  60 வீதத்தை மட்டுமே ஈடுகட்டமுடிகிறது .

 

இதன்பொருள், விலையேற்றத்தின் போது,  ​​DA அதிகரிப்பு என்பது 60% சுமைகளை மட்டுமே ஈடுகட்டும்  மற்றும் விலையேற்றத்தின்  40% சுமையானது  தொழிலாளி தனது நுகர்வு குறைப்பதன் மூலம் தன் தோள்களில் தாங்கிக்கொள்கிறான். ஏற்கனவே ஒரு “குறைந்தபட்ச” நுகர்வில் இருக்கும் தொழிலாளர்களை ,மேலும்  நுகர்வை குறைக்க வேண்டும் என்பது முரணாக உள்ளது .இதுபோன்ற குறைந்த பட்ச ஊதியம் நிர்ணியப்பது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது மட்டுமல்லாது தெளிவான குற்றமாகும்.

 

ஒரு வாதத்திற்காக, நாம் ஐந்து நுகர்வோர் அலகுகள் (இந்திய தொழிலாளி பெரும்பாலும் அவரது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பதால்) எடுத்துக் கொண்டால், இன்னும் கூடுதலான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்த  ஒரு உண்மையான பிரச்சனையை தான் சரியான விசாரணைக் குழுவை நியமிப்பதன் மூலம்  ஆய்வு செய்திட வேண்டும்.பல நாடுகளில் தொழிலாளி தனது பணிகளை பத்து ஆண்டுகளுக்குள் ஐந்து அலகுகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், இந்திய சூழலில்  அது இன்னும் குறைந்த நேரமாக இருக்கலாம்.

 

குறைந்த பட்ச ஊதிய விகிதம் பற்றிய நமது புரிதல், உறைவிடம், ஓய்வூதியம் பற்றிய நமது புரிதலை மேலும் அதிகரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளி ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து வாழ்ந்து வருவார். அவரது உணவு சற்றே குறைக்கப்படலாம் ஆனால் மருந்துகளின் செலவுகள் நிச்சயமாக அதிகரிக்கும்.மேலும், குறைந்தபட்ச ஊதியக் கருத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கூட ஒரு சொந்த வீட்டை வாங்குவதற்கு போதுமான சேமிப்பு இல்லை.

இது ஒரு காரணியாக இருந்தால், குறைந்தபட்ச ஊதியம் சுமார் மாதம் ரூ.50000 என கணிக்கிறோம்.

 

உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது  கணக்கீட்டினை எளிதாக  அமைக்க அமெரிக்காவை எடுப்போம். அமெரிக்காவில் ‘குறைந்தபட்ச ஊதியம் உலகநாடுகள் இடையே அதிகபட்சமானதாக  இல்லை. உண்மையில், சமீபத்திய தேர்தல்களில், பெர்னீ சாண்டரின் முக்கிய கவலைகளில் ஒன்று, ஹிலாரி கிளின்டன் ஒப்புக் கொண்ட குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதாகும்.

 

அமெரிக்காவில் தற்போது குறைந்தபட்ச ஊதியம் 7.25 டாலர் ஆகும்.

இது ரூ. மாதத்திற்கு 1 லட்சம் ஆக வருகிறது. ஆனால் , குறைந்தபட்ச ஊதியங்களை இந்த வகையில் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்காது ஏனெனில், பரிமாற்ற விலை (Exchange Rate) முழுமையான    யதார்த்தத்தை வெளிப்படுத்தாது. இந்தியாவில் ஒரு குவளை காபி ரூ. 25 ஆனால், அமெரிக்கவில்  டாலரில் ஒரு குவளை  காபி $ 2 அல்லது ரூ. 135  என முதலாளிகள்  சுட்டிக்காட்டுவர்.இது ஒப்பிடத்தக்கது அல்ல.

 

 

“வாங்கும்  திறன் சமநிலை” (Purchasing Power Parity)  முறை என்று மற்றொரு முறை உள்ளது. இது ரூபாயையும், டாலரையும் பரிமாற்ற விலையால் ஒப்பிடாமல் அவர்களுடைய வாங்கும் திறன் அடிப்படையில் ஒப்பிடுகிறது. இந்த முறையின் படி  ரூ.17  என்பது  ஒரு  டாலரின் வாங்கும் திறன் மதிப்புக்கு நிகராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த முறையின் படி  கூட, ரூ.125.25 என்பது 7.25 டாலரின் வாங்கும் திறனாக ஆகும். எனவே, அமெரிக்காவின் குறைந்தபட்ச ஊதியம்  மணிக்கு ரூ. 123.25  அல்லது நாள் ஒன்றுக்கு  ரூ.986  அல்லது மாதத்திற்கு  ரூ.29580 . இதன்மூலம், சுமார் ரூ. 30000 கொண்டு  இந்தியாவில் வாங்க முடிவதை , அமெரிக்காவில் உள்ள குறைந்தபட்ச ஊதியம்  கொண்ட ஒரு தொழிலாளியால் வாங்கமுடியும்.   குறிப்பாக வாங்கும்  திறன் சமநிலை(PPP) அடிப்படையில்,பல நாடுகளில் அமெரிக்காவை விட குறைந்தபட்ச ஊதியம் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில்  $ 10 (PPP இல் சர்வதேச அமெரிக்க டாலர்கள்) க்கு மேல் குறைந்தபட்ச ஊதியம் உள்ளது, இது ரூ. 40000 மாதத்திற்கு வாங்கும் திறனுக்கும் அதிகமானது.அயர்லாந்திலும் அர்ஜெண்டினாவிலும் கூட அமெரிக்காவை விட அதிக வாங்கும் திறன் கொண்ட குறைந்தபட்ச ஊதியம் உள்ளது.

 

குறைந்தபட்ச ஊதிய விதிமுறை 1991 ஆம் ஆண்டில் சரிசெய்யப்பட்டது என்று வாதிடலாம் (உச்ச நீதிமன்றத்தின்   ராப்டகோஸ்  பிரட் Raptakos Brett  தீர்ப்பில்). அசல் விதிமுறைகளிருந்து சரிசெய்வதற்கு எடுத்துக்கொண்ட அவகாசம்(1957 to 1991)   34  வருடங்கள் . மேலும்,இப்போது 25 ஆண்டுகள்  கடந்து விட்டன. அவசிய தேவைகள்  பல மடங்கு வளர்ந்துவிட்டன. 1991 இல் ,கணினிகள் மற்றும் அலைபேசிகள் அவசியமானவை அல்ல, ஆனால் இப்போது தெளிவாக மிக அவசியமாக இருக்கின்றன. ஒரு தொழிலாளியின்  வாழ்க்கையை மீண்டும் ருவாக்குவதற்கான செலவில்  இன்னும் பல அம்சங்களை இப்போது சேர்க்கலாம். இது யதார்த்தமாக மாற்றியமைத்தால், குறைந்தபட்ச ஊதியம் இன்னும் கூடுதலாக இருக்கும்.

 

ஆனாலும், நாம்  15 வது ஐஎல்சியின்(ILC) விதியின்படியும் மற்றும் 7 வது ஊதிய ஆணைக்குழுவின்  புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தியும் ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு தேதியின் படி  ரூ.22000  ஆக  கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம். நாங்கள் இந்த கோரிக்கையை ஒரு உயர்மட்டக் கொள்கையின் தன்மையில் கொண்டிருக்கவில்லை, ஆனால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு ஒரு விஞ்ஞான அடிப்படையில் மட்டுமே போராடுகிறோம்.எனவே ,அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முன்வந்து இந்த கோரிக்கையை ஆதரிக்குமாறு

கேட்டுக்கொள்கிறோம். நாம் இதை இன்னும் வளர்ச்சிபெறச்செய்து,

எதிர்காலத்திற்கான மிகவும் யதார்த்தமான குறைந்தபட்ச ஊதியத்தை உருவாக்க வேண்டும்.

வாருங்கள் , நமது போராட்டத்தை  தொடங்குவோம்.

 

 சோசலிச தொழிலாளர் மையம் – M.A.S.A

தமிழில்: லோகேஷ் 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW