‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்

10 Oct 2018

ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார்.

‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு 130 கோடி மக்களின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. கைபேசி எண், வங்கிகணக்கு, பள்ளி சேர்க்கை போன்ற சிலவற்றிற்கு ஆதார் இணப்பு கட்டாயமில்லை என்றும் வருமான வ்ரி கணக்கு எண் (PAN), வருமானவரி தாக்கல் செய்வது மற்றும் மக்கள்நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயங்கள் மூன்று. ஒன்று, பிரிவு 7, இரண்டு   பிரிவு 57 மற்றும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘பணமசோதா’வில் ஆதார் குறித்த சட்டத்தை அறிமுகம் செய்தது.

.பிரிவு 7ன் படி அரசு நம் தகவல்களை பெறுவது, சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அரசு மக்களை கண்காணிக்க சட்டபூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது. இத்தகவல்கள் வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள  நிறுவனமான L1 identiy solution operating co. இந்த சேவையை இந்திய அரசிற்கு வழங்கிவந்தது. அந்த நிறுவனத்தை தற்போது பிரன்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.      இதே நிறுவனம் தான் பாகிஸ்தானின் அடையாள அட்டை தகவல்களை சேமிக்கிறது. இதுபோன்ற அடையாள அட்டை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு (Social secutiy number) கைவிடப்பட்ட்து. தனிநபர் உரிமைகளில் தலையிடுவதாக கூறி ஆஸ்திரேலியாவில் 2007ஆம் ஆண்டிலும்  இங்கிலாந்தில் 2011ஆம் ஆண்டிலும் வாபஸ் பெறப்பட்டது. பிலிப்பைன்ஸில் கைரேகையுடன் கொண்டுவரப்ப்ட்ட தேசிய அடையாள அட்டை தனிநபர் உரிமை மீதான தாக்குதல் எனவும், சட்டவிரோதமானது எனக்கூறி அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடைசெய்தது.. ஆனால் நம்நாட்டில் இனி இதற்கு தடை இல்லை. அரசின் கண்காணிப்பில் வரப்போகும் குடிமக்களை பற்றி எந்த எதிர் கட்சிகளும் வாயை திறக்கவில்லை

 

பிரிவு-57; ஆதார் தகவல்களை அரசு மட்டுமே பயன்படுத்தலாம் என முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. ஆனால் பா.ஜ.க அரசு தனிநபர், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்திகொள்ளலாம் என சட்டம் இயற்றியது தற்போது இந்த பிரிவிற்கு தான் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனால் தகுந்த சட்டம் இயற்றி அதன் மூலம் அதையும் பெறமுடியும் எனக் கூறியுள்ளது. இதன் மூலம்தான் செல்போன் நிறுவன்ங்கள் ஆதார் இணைபிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்புக்கு பின் பேட்டியளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி செல்போன், வங்கி கணக்குக்கு ஆதார் தேவை என்பதற்கு சட்டம்கொண்டு வருவோம் எனக்கூறியுள்ளார். இது நடைமுறைக்கு வருமா? இல்லையா எனத் தெரியாது ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சட்டம் கொண்டுவருவோம் எனச் சொல்ல காரணம் என்ன ? ஏனெனில் ஆதார் மூலம் பயனடைந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் எதிர்கால நலன்கள்.

 

தகவல் என்பது ஒரு எரிபொருளை போன்ற மதிப்புடையது (DATA IS NEW OIL) என ஆதார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நத்தன் நீல்கேனி சொன்னார். ஆதார் தகவல் மூலம் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன. தொலைதொடர்பு நிறுவனங்களில் ஐடியா, வோடபோன், ஏர்டெல், ஜியோ மற்றும் பேமெண்ட் வங்கிகள் எனப்படும் PAYTM, ewallet, ஜியோ பேமெண்ட் வங்கி, SBI பேமெண்ட் வங்கி, அஞ்சல் துறை பேமெண்ட் வங்கி மற்றும் OLA போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆதார் மூலம் பணப்பரிமாற்றம் செய்தன. கடந்த ஆண்டு 74,000 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் ஆதார் மூலம் நடந்திருக்கின்றன. பேமெண்ட் வங்கிகள் Digital பரிவர்த்தனைகள் மூலம் ஆண்டுக்கு 10,000கோடி லாபம் ஈட்டுகின்றன..மேலும் பிர்லா, தமிழகத்தை சேர்ந்த சோழமண்டலம் போன்ற பல நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு காத்திருக்கின்றன. அதன் காரணமாகவே அரசு புதிய சட்டத்தை கொண்டுவர நினைக்கிறது.

ஆளும் பா,ஜ.க வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் இச்சட்டம் பணமசோதா என்ற அடிப்படையில் மக்களவையில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் 4 பேர் இச்சட்டம் செல்லும் எனவும் நீதிபதி சந்திரசூட் மட்டும் இச்சட்டம் ஒரு மோசடி எனக்குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு சட்டமும் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் வாக்கெடுப்பின் மூலம் சட்டமாக்கபடவேண்டும். வருங்காலங்களில் மேலும் பல சட்டங்கள் இவ்வழியாக வரலாம். காங்கிரஸ் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியுள்ளது.

ஆதார் திட்டத்திற்கு ஏறத்தாழ 50,000 கோடி மக்கள் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ்  முதல் இறப்பு சான்றிதழ் வரை, ரேசன் கடை முதல் திருப்பதி கோவில் வரை  வாக்காளர் அடையாள அட்டை தவிர அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்ட காரணத்தால் 122கோடி மக்களுக்கு (98%)தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2015 ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் படி ஆதார் எண் என்பது தானாக முன்வந்து எடுப்பது  எனக்கூறி அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக விளம்பரம் செய்யவேண்டும் என தீர்ப்பளித்த்து. 2015 ஆம் ஆண்டு ஆதார் எடுத்தவர்களின் எண்ணிக்கை 73கோடி. ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுகொண்டு ஏறக்குறைய அனைத்திற்கும் ஆதார்  கட்டாயமாக்கினர். ஆனால் இறுதிதீர்ப்பில் அரசின் இச்செயலுக்கு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. 1956, 1961 ஆம் ஆண்டு அந்தரங்கம் என்பது தனிநபர் உரிமை அல்ல  என  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 56 ஆண்டுகளுக்கு பின் 2017 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன் அமர்வு  தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என தீர்ப்பளித்தது. காலத்திற்கு ஏற்றவாறு அந்தரங்கம் பற்றிய மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதுபோல இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் இக்காலத்தில் மக்களை கண்காணிப்பு வளையத்திற்குள்  கொண்டு வரும் இந்த ஆதார் தீர்ப்பும் எதிர்காலத்தில் மீண்டும் மாற்றி எழுதப்படும்.

  • கார்த்திகேயன்

Source

Frontline ,Times of india, caravan, The wire, Scroll and UIDAI site

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW