ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு
#மதுரை_30_08_2018
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில்
தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர்
தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்றார்.. உடன்
தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர்
தோழர் கே.எம்.சரீப்
தமிழ்ப்புலிகள் தலைவர்
தோழர் நாகை.திருவள்ளுவன்
பி.யூ.சி.எல். மாநிலச் செயலாளர்
பேரா. முரளி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் தூத்துக்குடி
ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன்
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப்
பொதுச்செயலாளர் தோழர் நிலவழகன்
புரட்சிகர இளைஞர் முன்னணி மதுரை அமைப்பாளர், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் குமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
**********************************************
* ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது.
* தமிழக அரசு,
ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய நிலம்,நீர்,காற்று மாசுபடுகளை சூழலியல் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
* தமிழக அரசு,
நாசகர ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் கூட்டி சட்டமன்றத்திலும்,அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவெடுக்க வேண்டும்.
* ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வன்முறைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஸ்டெர்லைட் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அரசு கைவிட வேண்டும்.
* UAPA சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் தோழர் முருகனை விடுதலை செய்ய வேண்டும்.
* சூழலியல் பாதுகாப்பிற்காகவும் ,தமிழக உரிமைகளுக்காகவும் போராடும் தோழர்கள் திருமுருகன் காந்தி,முகிலன்,வளர்மதி,மணியமுதன் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
* மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ்(தேசிய செயலாளர் ,பி யூ சி எல்), கெளதம் நவலகா (பி யூ டி ஆர்),பாதிரியார் ஸ்டாண்ட் சுவாமி ,வெர்னான் கன்சல்வேஸ் (வழக்குரைஞர்),கவிஞர் வர வர ராவ்(இடதுசாரி செயல்பாட்டாளர்),பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ட்டே ஆகியோர் மீதான அடக்குமுறையை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும்
_ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இச்சந்திப்பு நடைபெற்றது.