எனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு!
– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
நேற்று 10.06.18 காலை 8-30 மணிக்கு தோழர் நமசு நம்மை விட்டுப் பிரிந்தார்! தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம்! சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ-எம்-எல் விடுதலை, தியாகி இமானுவேல் பேரவை என மக்கள் விடுதலைக்கான நீண்ட அரசியல் பயணம் செய்தவர் தோழர் நமசு. இந்திய மக்கள் முன்னணியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியவர். 1985 முதல் எனக்கு அறிமுகம். சாதிய நிலவுடமை கப்பலூர் ஆதிக்க சக்திக்கு எதிரான உணர்வை மக்கள் இயக்கமாக தோழர் சுப்பு, திருவாடனை எஸ்.என்.டி.எல் பஞ்சாலைத் தொழிற்சங்க இயக்கத்தை கட்டியமைத்த தோழர் கோட்டைச்சாமி ஆகிய மூவர் குழுவில் தொடங்கி தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர வேலையின் தலைவன். எனது ஆசான்களில் மிக முக்கியமானவர். என்னைக் களத்தில் இறக்கி நடை பழக்கியவர். திருச்சியில் சனவரி 25, 2018 அன்று நாம் நடத்திய தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டில் கலந்து கொண்டார். கௌரவிக்கப்பட்டார். இன்று 11-06-2018 இறுதி அடக்கம் திருவாடனை நடைபெற்றது.