ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்!
மேலதிக உடனடி கோரிக்கைகள்!
தமிழக அரசே!
- படுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே !
- மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே! படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு செய்!
- ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து காவல் துறை தலைவர், தலைமை செயலர் மற்றும் ஆளுனருடன் இணைந்து மத்திய அரசின் சதித்திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தீட்டாதே
- அணைத்து காவல் படையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திரும்பப்பெறு, போராட்ட குழுக்கள், அரசியல்- சமூக தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்து பேசு, சுமூக சூழலை ஏற்படுத்து !
- காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிடு, துப்பாக்கிசூட்டையும், வன்முறையும் உடனே நிறுத்து !
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை உடனே அறிவித்திடு
#BanSterlite#StopStateTerror#TuticorinMassacre