மக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!!
ஏப்ரல் 2 அனைத்து இடங்களிலும் இரயில் மறியல், ஆர்பாட்டங்கள் நடத்துவோம்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்.!
அன்பார்ந்த தோழர்களே,
நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆணையிட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மோடி அரசு.! கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் ஆதாயத்துக்காக தீர்ப்பை அமல்படுத்தாமல் கால தாமதம் செய்து குழப்பம் விளைவிக்கும் வகையில் மீண்டும் நீதிமன்றமே தெளிவு படுத்த வேண்டுமென முறையிடுகிறது மத்திய அரசு.! கடந்த சில ஆண்டுகளாகவே காவிரி டெல்டாவில் விவசாயம் சீரழிந்து போனதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் ! இந்த வேதனை தரும் உண்மையை அறிந்தபிறகும் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்க விடாமல் கொடும்பாதாக செயலை செய்ய முனைகிறது தமிழர் விரோத காவி அரசு.!! இன்னொருபுறம் எண்ணெய், எரிவாயு பேரழிவு திட்டங்களுக்கான ஒப்பந்த அனுமதியை தினசரி அறிவித்து வருகிறது.காவிரியையும் விவசாயிகளையும் அழித்துப் பாலைவனமாக மாற்றத் துடிக்கிறது தில்லி கொடுங்கோல் அரசு.! அடிமை சேவக தமிழக அரசோ கையாலாகாமல் வேடிக்கை பார்த்துவிட்டு தற்கொலை செய்வோம், உண்ணாவிரதம் இருப்போம் என நாடகம் ஆடுகிறார்கள் .! மக்கள் வீதிக்கு வாராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!
மாணவர்களே இளைஞர்களே,விவசாயிகளே, தொழிலாளர்களே, அனைவரும் வாருங்கள் தன்னெழுச்சியாக மறியல் போரிலே இறங்குவோம்.! அடிமை அரசையும், துரோகம் செய்யும் மத்திய அரசையும் விரட்டுவோம். காவிரி விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் வாழ்வாதார பிரச்சனையாகும்.மீண்டும் சொல்கிறோம். மக்கள் வீதிக்கு வாராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!! ஏப்ரல் 2 மறியலுக்கு தயாராவோம்!
தோழமையுடன்
பாலன் , பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி