ஆய்வுக்குழு நாடகத்தை நிறுத்து! பொது வாக்கெடுப்பு நடத்து!”

28 Sep 2018

“தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு” வேதாந்தா நிறுவனம் விருப்பப்படி நியமிக்கப்பட்டக் குழு என்பதை நாம் முதலில் தெளிவு பெற வேண்டும்!

அடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தாமல், ஆய்வுக்குழு- கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு நாடகமே!

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைத் தேவையா என்பது குறித்து தூத்துக்குடி வட்டார மக்களிடம் “பொது வாக்கெடுப்பு” நடத்துவதே உண்மையான கருத்துக் கேட்பாகும்!

பொது வாக்கெடுப்பு நடத்தத் துப்பில்லாத அரசு, ஆய்வுக்குழுவின் கருத்துக் கேட்பு மூலம் சரியான தீர்வு காண முடியாது!
ஏதோ பெயரளவில் நடத்தப்படும் ஆய்வுக்குழுவின் கருத்துக் கேட்பு என்பது மக்களை ஏமாற்றவே வழிவகுக்கும்!

தமிழக அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திருவாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசாங்கம்,
“ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து தனது அமைச்சரவை மூலம் அல்லது சட்டமன்றத்தின் மூலம் கொள்கை முடிவு எடுக்கவில்லை! மாறாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வெற்று அரசாணை மட்டுமே வெளியிட்டதால், அதைத் தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் டெல்லியிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சென்றது!
அதன் மூலம், ஆலைக்குள் நிர்வாகப் பணி மேற்கொள்ள அனுமதிப் பெற்று, சீல் வைக்கப்பட்ட ஆலைக் கதவின் பூட்டைத் திறந்து, மீண்டும் ஆலைக்குள் “வேதாளம் வேதாந்தா” நுழைந்தை நாம் மறந்து விட்டோமா? இது வேதாந்தாவிற்கு சார்பாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்த முதல் வாய்ப்பு என்பதை நாம் தெளிவு பெற வேண்டும்!

மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு சார்பாக ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என தமிழக அரசின் வழக்குரைஞர் குற்றஞ் சாட்டியதை நாம் மறந்து விட்டோமா?

ஆகவே, நாம் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு சென்று ஸ்டெர்லைட் ஆலைத் தேவையில்லை என்று சொல்வதை விட நாம் செய்ய வேண்டிய முதல் வேலை…

* ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகப் பணி செய்யும் வேதாந்தாவின் எடுபிடிக் கும்பலை வெளியேற்று!” என உரக்கச் சொல்வோம்.

*உண்மை நிலையை உலகறியச் செய்ய, தூத்துக்குடி வட்டார மக்களிடம்
‘உயர்நீதிமன்ற நீதிபதிகள்’ மேற்பார்வையில், “பொது வாக்கெடுப்பு நடத்து!”என்ற கோரிக்கையை முன்வைப்போம்.
————————–
பி.மி.தமிழ்மாந்தன்,
ஒருங்கிணைப்பாளர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், தூத்துக்குடி
(28-9-2018)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW