தோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்

25 Aug 2018

தென்திசை நாடுகளில் மிக முக்கியமான புரட்சிகர மார்க்சிய சமூகப் பொருளாதார அறிஞ களில் ஒருவரான தோழ சமீர் அமீன் கடந்த 12.08.2018 அன்று தனது 86வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் வலதுசாரிய சிந்தனைகளை விமர்சித்து வந்த தோழர் சமீர் அமீன் அவர்கள், சமூக மற்றும் அரசியல் ஊடாட்டங்களின் மூலம் உலகை மாற்றும் உத்திகள் குறித்து எழுதியும் பேசியும் வந்துள்ளார். அந்த வகையில், 30க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், நுhற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

1931 – ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் பிறந்த தோழர் அமீன் 1947 முதல் 1957 வரை பாhPஸில் பொருளாதாரமும், புள்ளியியலும் கற்றார். அங்கு மாணவராக இருக்கும் போதே, ஃபிரஞ்சு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஆனால் இருவித பிரச்சினைகளின் காரணமாக அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். ஓன்று அல்ஜீரியப் புரட்சிக்கு அக்கட்சி இழைத்த துரோகம், மற்றொன்று ஐரோப்பிய கம்யுனிஸ்ட் கட்சிகளில் இருந்த ஐரோப்பிய மையவாதம்.

ஐரோப்பிய மையவாதம் போதிக்கும் வளர்ச்சிக் கருத்துக்களின் பால் வெறுப்பு கொண்ட தோழர், அவற்றை உடைக்கும் பொருட்டு, மானுட விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவத்திற்கும், செயல்பாட்டிற்கும் இடையிலான கண்ணியைத் தேடிக் கொண்டிருந்தார். தோழர் காரல் மார்க்ஸ் தமது காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்டு செய்த ஆய்வுகளின் அடிப்படையில் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப்படிநிலைகளாகக் கூறிய மதவாதம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் என்ற பொருளாதாரவாதமற்ற கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முயன்றார் தோழர் அமீன். ஆசிய நாடுகளின் வளர்ச்சி வளர்ச்சிப்போக்கு என காரல் மார்க்ஸ் கூறிய கருத்துக்கள் முழுமையடையவில்லை எனக் கருதிய தோழர் அமீன், கிளைத்த உற்பத்தி உறவுகள் வளர்ச்சிப் படிநிலைகள் (Tributary Modes of Production) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். இக்கருத்தாக்கத்தின் துணைகொண்டு, எகிப்து மற்றும் சீனா போன்ற சமூகங்கள் முதலாளித்துவ சமூகம் எட்டிப்பார்க்காத ஆயிரமாண்டுகளுக்கு முன்பே அடைந்த வளர்ச்சியை விளக்கியது. அவருடைய சொற்களிலேயே ”கிளைத்த உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப்படிநிலை என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய வளர்ச்;;;சிக் கட்டம். அதில் அடிமைத்தனம் என்பது ஒரு விதிவிலக்கு மட்டுமே விதியல்ல. துய வணிகவளர்ச்சி படிநிலையும் அல்ல ஆனால் அதன் குறுகிய வடிவமே. நிலப்பிரபுத்துவம் என்பது கிளைத்த உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப்படிநிலையின் புறநிலை ஆகும். இம்மாதிரியான ஒரு குறை வளர்ச்சி சமூகம், (இங்கு ஆப்ரிக்க மற்றும் ஆசிய சமூகங்கள் எனலாம். இந்தியாவும் அடக்கம்) மதவாத குணாம்சம் கொண்டிருக்கும். அதன் காரணமாக ஐரோப்பிய குறிப்பான வளர்ச்சி மாதிரியை பிரதிபலிக்கக் கூடியது.” ஏன வரையறுக்கலாம். (Global History: A view from South – Samir Amir)

ஃபிரஞ்சு கம்யுனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி சொந்த நாட்டிற்கு வந்த தோழர் அமீன், நாசர் அரசின் கொள்கை நிர்மாணிப்புப் பணிகளில் ஈடுபட்டார். 1960 – ல் எகிப்தை விட்டு வெளியேறி மாலியில் சிறிது காலம் பணியாற்றி விட்டு, பின் 1965ல் பாரீஸ் சென்று ஆசிரியப் பணிகளை மேற்கொண்டார். ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களிலும், ஜான்ஜிபார் புரட்சியிலும் தோழர் பாபு அவர்களுடன் கலந்துகொண்டார். ஐநா நடவடிக்கை குழுக்களில் (UNCTAD) பணியாற்றியுள்ளார். மூன்றாம் உலகப் புரட்சியாளர்களான மைக்கேல் மான்லி, ஜுலியஸ் நெய்ரேரே மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோருடன் இணைந்து புதிய சர்வதேசிய பொருளாதார ஒருங்கமைப்பை (NIEO) ஏற்படுத்தினார்.

ஆப்ரிக்க பெண்ணியவாதிகளுடன் சேர்ந்து பணியாற்றிய போது, ‘அரசியல் இஸ்லாம்’ பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். “அரசியல் இஸ்லாம் என்றுமே சார்புவாத முதலாளித்துவத்துடனும் (Dependent Capitalism)> ஏகாதிபத்தியத்துடனும் ஒட்டிக் கொள்ளும். அது சொத்துடைமையை பாதுகாக்கும். அது தான் வளர சமத்துவமின்மையையும், முதலாளித்துவ மறுஉற்பத்தியையும் கோரும்” என்று வரையறுத்தார். இன்றைய சூழலில், இந்த அரசியல் இஸ்லாம் பாகிஸ்தானிலும், சவுதி அரேபியாவிலும் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து செயல்படுவது கண்கூடு.

தோழர் அமீன் பின்நவீனத்துவம் பற்றி, “ நவதாராளவாத கற்பனை உலகத்தின் மறுஉருவம் தான் பின்நவீனத்துவம். அதற்கு குறை அடர்த்தி கொண்ட சமூகம் எளிய இலக்காகும். பாசிசத்தின் எழுச்சியே இதற்கு சிறந்த சாட்சி” என விமர்சித்தார்.

தோழர் அமீன் அவர்களின் தத்துவார்த்த வேலைகளிலேயே சிறந்தது, ‘உலகளாவிய மூலதன குவிப்பு’(Accumulation on World Scale) மற்றும் ‘சமமற்ற பரிமாற்றம் (Unequal Exchange) ஆகியவை பற்றிய ஆய்வுகளும் கருத்துகளும் தான். சமமற்ற பரிமாற்றம் குறித்து 1970 களில் இருந்து இன்று வரை உலகம் முழுவதும் உள்ள கம்யுனிச கட்சிகளில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. சமமற்ற பரிமாற்றம் தான் இன்று உலகெங்கும் நடக்கும் முதலாளித்துவ சூறையாடல்களின் மையக்கருத்து. ஆப்hpக்காவில் மரபணு மாற்ற விதைகளின் பரவலின் பின்னாலுள்ள அரசியலைப் புரிந்துகொண்டு, எதிர்த்து போராட வேண்டிய அவசியம் இருந்தது. மரபணு மாற்று பயிர்களுக்கும், விவசாயிகளின் தொழில் பெயர்வு, உணவுப் பற்றாக்குறை, பஞ்சம், பருவகால மாற்றம், சேரிகளின் பெருக்கம் ஆகியவற்றிற்கும் உள்ள உறவை தோழர் அமீன் விளக்கினார். ஆக, இதன் மூலம் ஆப்ரிக்க போராட்ட குழுக்களுக்கும், இளம் புரட்சியாளர்களுக்கும் ஏற்பட்ட புரிதல், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் வடக்கு ஆப்ரிக்காவில் நேட்டோ படையினர் மேற்கொண்ட ஆக்ரமிப்புகள் குறித்து தெளிவாக அம்பலப்படுத்த உதவியது. மேலும், ஆப்ரிக்காவில் காலனிய ஆட்சியாளர்களால் போடப்பட்ட அஸ்திவாரங்கள், எப்படி தற்கால சுரண்டல்களுக்கு உதவுகின்றன என்பதை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். (African Agriculture: The critical choices – Samir Amin)

‘விவசாயத்தை நவீனப்படுத்துதல்’ ‘பசுமை புரட்சி’என்ற பெயரில் மேற்கத்திய உயிர் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆப்ரிக்க விவசாயத்தின் மரபணு பன்முகத் தன்மையை நாசப்படுத்தின. இந்த சுரண்டல் தொடர்ச்சியாக காலனியாதிக்க காலத்திலிருந்து நடந்து வருகின்றது. ‘காலனிய வணிகப் பொருளாதாரம், சுரங்க மாபியாக்களுக்கு மானியம், தொழிலாளர் இருப்பு’ ஆகிய மூன்று அமைப்பு ரீதியிலான சுரண்டல் வடிவங்கள், தொழிலாளர்களின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தன. அவர்களை பட்டினியில் தள்ளின. ஆப்ரிக்க சமூகங்களை சார்பு விளிம்பு நிலைச் சமூகங்களாக மாற்றின. உலக வங்கியும், ஐ.எம்.எஃப்ம் மேற்கத்திய பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் சீர்திருத்தங்களை முயற்சித்தது. ஆனால் அவை பயன்தரா மாட்டாது. முதலாளித்துவ விவசாயம் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளிலிருந்து வெளிவரவும், தேசிய பார்வையில் விவசாயத்தை தொழில்மயப்படுத்தவும் ஜனநாயகத்தின் பங்கு மிக முக்கியமானது என தோழர் அமீன் கருதினார். ஆகவே ஆப்ரிக்க நாடுகள் தங்களுக்குள் பொருளாதார ஒருங்கமைப்பும், பரஸ்பர பங்களிப்புகளின் மூலமும் ஆப்ரிக்க சமூகத்தை ஓர் உண்மையான சிவில் சமூகமாக கட்டமைக்க வேண்டும் என விரும்பினார (Underdevelopment & Dependencies in Black Africa: Origin & Contemporary Forms – Journal of Modern African Studies Vol.10 No.4 Dec 1972 PP.503 – 24)

 

தோழர் சமீர் அமீனின் ஆய்வுகளில் சில இந்திய மற்றும் தமிழ்ச்சமூகத்திற்கும் பொருத்தப்பாடுடையதே. அவரின் வழிகாட்டுதல்களை ஆழமாக புரிந்து கொண்டு இந்திய மற்றும் தமிழ் சமூகத்திற்கு குறிப்பாக எப்படி பொருத்துவது என்ற ரீதியில் பயணப்படுவது, அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இக்கட்டுரை பின்வரும் கட்டுரைகளைத் தழுவி எழுதப்பட்டது.

 

  1. Samir Amin : A tribute to a fighter against global capitalism – Horace Campbell – Pambazuka News – African Socialist initiative – Sep 08, 2011.
  2. Samir Amin – Intellectual appropriate to the global South – K.M.Seethi, August 14, 2018, Countercurrent.org.

 

  • தோழர் சுரேஷ்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW