ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி தோழர் தமிழ்மாந்தன் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியான ஈகியருக்கு 30-06-18 அன்று அஞ்சலிப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையால் மறுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி கோரிய மனுவிற்கு தூத்துக்குடி காவல்துறை வழக்கம் போல் சட்டம் – ஒழுங்கு பல்லவியோடு சொல்லியுள்ள பதிலில்……சிப்காட் காவல்நிலையத்தில் அடுத்தடுத்த எஃப்.ஐ.ஆர் எண்களில் புதியதாக 11 வழக்குககள் பதிந்துள்ளது. மே 22 அன்று நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் தமிழ்மாந்தன் எனக் குற்றம் சாட்டியுள்ளது. வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் இருவர் மீதும் கூறிய அதே குற்றச்சாட்டை, 1996இலிருந்து தூத்துக்குடியில் போராடி வரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீதும் புனைந்துள்ளது. தொடரும் பொய்வழக்குகளை, கைதுகளை நிறுத்து! எனக் குரலெழுப்புவோம்! தூத்துக்குடி மக்களுக்குத் துணை நிற்போம்! ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அப்புறப்படுத்த உயிரிழந்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
பேச: 9443184051