மக்களவைத் தேர்தல் முடிவுகள் – மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 2 – தோழர் செந்தில்
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரும் முழக்கம் மக்களவையில் மூன்றாம் முறையாக பதவியேற்ற மோடி, அரசமைப்பு சட்டத்தைத் தொட்டு வணங்கி, அதில் தாம் பற்று வைத்திருப்பதாக ஒரு தோற்றம் காட்டினார். ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த மோடியைக் கூட அரசமைப்புச் சட்டத்தை வழிபட வைத்துவிட்டோம்...