ஆகஸ்டு 15 சுதந்திர நாளன்று தேர்தல் சனநாயகத்தை மீட்க உறுதியேற்போம்! ‘வாக்கு திருடன்’ மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்
பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற அமைப்பு முறையையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற சனநாயக நெருக்கடி நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 7 ஆம் நாள் காங்கிரசு...