நாதியில்லை தமிழர்களுக்கு! நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை! நரேந்திர மோடி வலிமையான பிரதமரா?
சில காலமாக தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவது நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் அது நடந்துள்ளது. நான்கு மீனவர்களின் உடல்கள் யாழ்ப்பாணக் கரைகளில் ஒதுங்கக் கண்டோம். கடந்த சனவரி 18 ஆம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து...