காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.
கடந்த நவம்பர் 21 அன்று காசுமீரைச் சேர்ந்த முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு குர்ரம் பர்வேசு அவர்களை ஊபா(UAPA) சட்டத்தின்கீழ் தேசிய புலனாய்வு முகமை(NIA) கைது செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக வழக்கு சோடிக்கப்பட்டு, இந்திய தண்டனை...